Published:Updated:

``ஆமாம், ஷ்ரத்தாவைக் கொலைசெய்தேன்; இன்னும் பல பெண்களுடன்..!" - உண்மை கண்டறியும் சோதனையில் அஃப்தாப்

அஃப்தாப் பூனாவாலா-ஷ்ரத்தா

காதலியைக் கொலைசெய்த குற்றத்தில் கைதுசெய்யப்பட்ட அஃப்தாபுக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

``ஆமாம், ஷ்ரத்தாவைக் கொலைசெய்தேன்; இன்னும் பல பெண்களுடன்..!" - உண்மை கண்டறியும் சோதனையில் அஃப்தாப்

காதலியைக் கொலைசெய்த குற்றத்தில் கைதுசெய்யப்பட்ட அஃப்தாபுக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

Published:Updated:
அஃப்தாப் பூனாவாலா-ஷ்ரத்தா

டெல்லியில் கடந்த மே மாதம் மும்பையைச் சேர்ந்த அஃப்தாப் பூனாவாலா தன்னுடைய காதலி ஷ்ரத்தாவைக் கொலைசெய்து, அவர் உடலை 35 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்து ஒவ்வொன்றாக எடுத்துச் சென்று காட்டில் வீசியெறிந்தார். இந்தக் கொலை தொடர்பாக கடந்த மாதம் 12-ம் தேதி, கைதுசெய்யப்பட்ட அஃப்தாபுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. கொலை நடந்து ஆறு மாதங்கள் கழித்து கைதுசெய்யப்பட்ட அஃப்தாபுக்கு இரண்டு முறை டெல்லி தடயவியல் ஆய்வுக்கூடத்தில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனைக்கு அழைத்து வரப்பட்டபோது அஃப்தாப் இருந்த போலீஸ் வாகனத்தின்மீது இந்து அமைப்புகள் தாக்குதல் நடத்தின. உண்மை கண்டறியும் சோதனையில் கிடைத்த தகவல்களை நீதிமன்றம் சாட்சியமாக ஏற்றுக்கொள்வதில்லை.

அஃப்தாப்  - ஷ்ரத்தா
அஃப்தாப் - ஷ்ரத்தா

ஆனால் அஃப்தாப் போலீஸாரின் கவனத்தை திசைதிருப்புவதற்கு வாக்குமூலத்தை மாற்றிக் கூறியிருக்கிறானா என்பதை உறுதி செய்வதற்காக இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

இது குறித்து போலீஸார் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ``தன் காதலியைக் கொலைசெய்து பல துண்டுகளாக வெட்டியதை அஃப்தாப் ஒப்புக்கொண்டான். உண்மை கண்டறியும் சோதனை, இந்தக் கொலையில் தொடர்புடைய சில தடயங்களைச் சேகரிக்க உதவியாக அமைந்திருக்கிறது. அதோடு ஷ்ரத்தா தவிர டேட்டிங் ஆப் மூலம் 15 முதல் 20 பெண்களுடன் தனக்குத் தொடர்பு இருந்திருப்பதையும் அஃப்தாப் ஒப்புக்கொண்டான்.

அஃப்தாப்
அஃப்தாப்

அஃப்தாப் தன் காதலியின் மொபைல், சிம்கார்டை மும்பை பயந்தர் கழிமுகப்பகுதியில் தூக்கிப்போட்டுவிட்டான். அதைத் தேடி எடுக்க இரண்டு நாள்கள் போலீஸார் படகில் சென்று தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. அஃப்தாப் மும்பையில் இருந்தபோது ஷ்ரத்தாவுடன் மொபைல் டேட்டிங் ஆப் மூலம் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் இருவரும் திருமணம் செய்யாமல் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தனர். ஆனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாலும், இருவரது வீட்டிலும் எதிர்ப்புக் கிளம்பியதாலும் இருவரும் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றனர். அங்கு கணவன், மனைவி என்று கூறி வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தபோது, அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் ஷ்ரத்தாவை அஃப்தாப் கழுத்தை நெரித்துக் கொலைசெய்துவிட்டான்'' என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.