கோவை சிவானந்தாகாலனி அருகே உள்ள கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (66). மாற்றுத்திறனாளியான நடராஜன், தன்னிடம் உள்ள நான்கு சக்கர தள்ளுவண்டியில், கூலி வேலைகளை செய்து வந்தார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில் இன்று காலை, அவர் அந்தப் பகுதியில் உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நடராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய பார்ட்சூனர் காரில் தி.மு.க கொடி கட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, தகவல் அறிந்து அங்கு திரண்ட நடராஜனின் உறவினர்கள்,

விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் குபேர ஆனந்த் என்பவரை அடித்து உதைத்து காவல்துறையில் ஒப்படைத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ரத்தினபுரி போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முதற்கட்ட விசாரணையில் அந்த கார் ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த உமாமகேஸ்வரி என்பவருக்கு சொந்தமானது என்றும், சர்வீஸ் விடுவதற்காக ஓட்டுநர் காரை எடுத்து சென்ற போது விபத்து நிகழ்ந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த விஷயம் வேகமாக பரவ, கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன் சம்பவ இடத்துக்கு விரைந்தார். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.