Published:Updated:

புதுக்கோட்டை:110 செல்போன்கள், மதிப்பு 22 லட்சம்!- திருட்டுப்போன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

மாவட்டம் முழுவதும் தொலைந்துபோன 110 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களின் உரிமையாளர்களை எஸ்.பி அலுவலகத்துக்கு வரவழைத்து மாவட்ட எஸ்.பி நிஷா பார்த்திபன், ஆவணங்களைச் சரிபார்த்து அவர்களிடம் ஒப்படைத்தார்.

செல்போன் திருட்டு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த நிலையில்தான், புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், மாவட்டம் முழுவதுமுள்ள காவல் நிலையங்களில் பதிவான மொபைல்போன்கள் தொலைந்துபோனது தொடர்பான புகார்களை விரைந்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனடிப்படையில் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான வழக்கு விவரங்களை வைத்து, புதுக்கோட்டை சைபர் க்ரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் ஆலோசனையின் பேரில் சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீஸார் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகத் துரித விசாரணையில் ஈடுபட்டுவந்தனர். அதன் பலனாக மாவட்டம் முழுவதும் தொலைந்துபோன 110 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

காணாமல்போன செல்போன்கள்
காணாமல்போன செல்போன்கள்

கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களின் உரிமையாளர்களை எஸ்.பி அலுவலகத்துக்கு வரவழைத்து மாவட்ட எஸ்.பி நிஷா பார்த்திபன், ஆவணங்களைச் சரிபார்த்து அவர்களிடம் ஒப்படைத்தார். மீட்கப்பட்ட செல்போன்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.22 லட்சம் என்று போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கைப்பேசிகளை மீட்பதற்குச் சிறப்பாகச் செயல்பட்ட முதல்நிலைக் காவலர்கள் பிரபுராஜி, சரவணக்குமார், போலீஸார் சியாமளன் ஆகியோரை சக காவல்துறை அதிகாரிகளும் பாராட்டினர். வெகு சீக்கிரமாகவே காணாமல்போன தங்களுடைய செல்போன் கிடைத்ததால், நெகிழ்ச்சியுடன் போலீஸாருக்கு நன்றி கூறிவிட்டுச் சென்றனர் அவற்றின் உரிமையாளர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு