Published:Updated:

பள்ளி மாணவிகளுக்கு செல்போனில் தொல்லை - கிறிஸ்தவ அமைப்பின் ஊழியர்கள்மீது நிர்வாகி புகார்

செல்போனில் தொல்லை
செல்போனில் தொல்லை ( Representational Image )

பள்ளிகளில் கிறிஸ்தவ மதபோதனைகளைக் கற்றுக்கொடுக்க பணியமர்த்தப்பட்ட இரண்டு ஊழியர்கள், மாணவிகளுக்கு செல்போனில் தொல்லை கொடுத்ததாக கிறிஸ்தவ அமைப்பின் நிர்வாகி போலீஸில் புகாரளித்திருக்கிறார்.

பள்ளி மாணவிகளுக்கு கிறிஸ்தவ அமைப்பின் ஊழியர்கள் இருவர் செல்போன் மூலம் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்திருக்கிறது. இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜோஷுவா கிருபாராஜ் என்பவர் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான், ஸ்கிரிப்சர் யூனியன் அண்ட் குழந்தைகள் ஸ்பெஷல் சர்வீஸ் மிஷன் கவுன்சிலின் இந்திய இயக்குநராக (Scripture Union & Children Special Service Mission Council of India) இருக்கிறேன். எங்கள் அலுவலகம் சென்னை அயனாவரத்தில் செயல்பட்டுவருகிறது. நாங்கள் கிறிஸ்தவ போதனைகளைப் பள்ளிக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்துவருகிறோம். இதற்காக சாமுவேல் ஜெய்சுந்தர் என்பவரை 1.4.2003-ல் ஊழியராக நியமித்தோம். பதவி உயர்வு பெற்ற அவர், ஆங்கிலத்துறையின் செயலாளராகப் பணியாற்றிவந்தார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

இவரின் பணி என்பது பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளுக்கு தேவையான கவுன்சலிங்கை அளிப்பதுது. வேலூர் மண்டலத்திலும், நாடு முழுக்க பல்வேறு ஊர்களிலும் சாமுவேல் ஜெய்சுந்தர் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். 2020-ம் ஆண்டு, ஆகஸ்ட் 4-ம் தேதி வேலூரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் எங்களின் ஊழியர் ஆல்பர்ட் என்பவருக்கு போன் செய்து பேசியிருக்கிறார். அப்போது அந்த இளம்பெண், எங்கள் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் செல்போன் நம்பர்களைக் கேட்டிருக்கிறார்.

வேதாரண்யம்: 16 வயது சிறுமி... பாலியல் வன்கொடுமை! - அ.தி.மு.க பிரமுகர் உட்பட 4 பேர் கைது

அதன் பிறகு அவரும் அவரின் தந்தையும் என்னுடைய செல்போனில் மறுநாள் பேசினார்கள். அப்போது எங்களின் ஊழியர் சாமுவேல் ஜெய்சுந்தர், மாணவிகளுக்கு ஆபாசமான மெசேஜ்கள் அனுப்பியதாக வாய்மொழியாகப் புகாரளித்தார். அந்த இளம்பெண்ணும், அவரின் தந்தையும் கூறிய தகவலின்படி விசாரணை மேற்கொண்டதில், அது உண்மை என்பதைக் கண்டுபிடித்தோம். நானும் சமூக வலைதளங்களில் அது போன்ற மெசேஜ்களைப் பார்த்தேன். இதையடுத்து, சாமுவேல் பள்ளிகளுக்குச் செல்வதற்கு தடைவிதித்து, பள்ளி மாணவிகளோடு அவர் பேசவும் தடைவிதித்துவிட்டோம்.

ஊழியர்கள் மீது புகார்
ஊழியர்கள் மீது புகார்

சாமுவேல் ஜெய்சுந்தரைப்போல எங்களின் மற்றோர் ஊழியர் ரூபன் க்ளமென்ட் என்பவரும் சமூக வலைதளங்கள் மூலம் பள்ளி மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதனால் சம்பந்தப்பட்ட இரண்டு பேரையும் அக்டோபர் 5-ம் தேதி முதல் பணியிடை நீக்கம் செய்துவிட்டோம் என்ற தகவலை தெரிவித்துக்கொள்கிறோம். அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் புகார் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு