Published:Updated:

சொத்துக்காக அதிக அளவு போதை மாத்திரை கொடுத்து கொலை! - சோனாலி மரண வழக்கில் வெளியான அதிர்ச்சி தகவல்

சோனாலி போகத்

சோனாலி போகத்தை அவர் பி.ஏ மற்றும் அவரின் நண்பர் சேர்ந்து சொத்துக்காக கொலைசெய்ததாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொத்துக்காக அதிக அளவு போதை மாத்திரை கொடுத்து கொலை! - சோனாலி மரண வழக்கில் வெளியான அதிர்ச்சி தகவல்

சோனாலி போகத்தை அவர் பி.ஏ மற்றும் அவரின் நண்பர் சேர்ந்து சொத்துக்காக கொலைசெய்ததாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published:Updated:
சோனாலி போகத்

ஹரியானாவைச் சேர்ந்தவர் சோனாலி போகத். நடிகையும், பா.ஜ.க பிரமுகருமான இவர், கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி அதிகாலையில் கோவாவில் நடந்த பார்ட்டியில் மர்மமான முறையில் இறந்துபோனார். இது தொடர்பாக சோனாலியின் பி.ஏ சுதிர் சங்வான், மற்றொரு நண்பர் சுக்விந்தர் சிங், ரெஸ்டாரன்ட் உரிமையாளர் எட்வின் உட்பட 5 பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்தக் கொலை வழக்கை ஆரம்பத்தில் கோவா போலீஸார் விசாரித்து வந்தனர். ஆனால் சோனாலியின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதால் இந்த வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. கொலை நடந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், சி.பி.ஐ அதிகாரிகள் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கின்றனர்.

சோனாலி
சோனாலி

கோவா மெபூசா நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட அந்த குற்றப்பத்திரிகை மொத்தம் 1,000 பக்கங்களைக் கொண்டதாக இருந்தது.

குற்றப்பத்திரிகையில் சோனாலியின் பி.ஏ சுதிர் மற்றும் மற்றொரு நண்பர் சுக்விந்தர் ஆகியோர் பிரதான குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் இரண்டு பேரும் கட்டாயப்படுத்தி பார்ட்டியில் சோனாலிக்கு எம்.டி.எம்.ஏ எனப்படும் ஒரு வகை போதை மாத்திரையை அளவுக்கு அதிகமாக கொடுத்திருக்கின்றனர். இறப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு வரை கொலைசெய்யும் நோக்கில் அவற்றை கொடுத்திருக்கின்றனர். கோவாவில் மிகவும் புகழ்பெற்ற அஞ்சுனா கடற்கரையில் உள்ள கிளப்பில் நடந்த பார்ட்டியில் எடுக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள் சாட்சியமாக சேர்க்கப்பட்டிருக்கின்றன.

கொலை
கொலை
சித்திரிப்புப் படம்

அதில் சுதிர் கட்டாயப்படுத்தி சோனாலிக்கு போதை மருந்து கலந்த தண்ணீரை குடிக்க கொடுக்கிறார். அதனை குடித்தப் பிறகு சோனாலியால் நடக்க முடியாமல் இரண்டு மணி நேரமாக கழிவறையில் அமர்ந்து தொடர்ச்சியாக வாந்தி எடுத்திருக்கிறார். கிளப்பிலிருந்து அதிகாலை 4:30 மணிக்கு அவர் தங்கியிருந்த இடத்துக்கு அவரது கூட்டாளிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். தங்கும் அறைக்கு சென்றபோது சோனாலியின் உடல் நிலை மிகவும் மோசமானது.

உடனே அவரை செயின்ட் ஆண்டனி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துபோனார். இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் கொலைசெய்யும் நோக்கத்தில் சோனாலிக்கு அளவுக்கு அதிகமாக போதை மாத்திரையைக் கொடுத்தது தெரியவந்ததாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சோனாலி 2019-ம் ஆண்டு ஹரியானாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் ஆவார். இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக்கில் பிரபலமான சோனாலி, அவற்றில் ஏராளமான வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார்.