Published:Updated:

மாமூல் வாங்கிக்கொண்டு கஞ்சா விற்பனைக்கு உடந்தை! - தலைமைக் காவலர், எஸ்.ஐ சஸ்பெண்ட்

எஸ்.ஐ
News
எஸ்.ஐ

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் போலீஸார், கஞ்சா வியாபாரிகளிடம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை செல்போனில் பேசியது தெரியவந்திருக்கிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமைக் காவலர் கஞ்சா கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு போலீஸாகவும் பணியாற்றியிருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள், கஞ்சா புழக்கம் அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் கஞ்சா புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் திருச்சி சரக டி.ஐ.ஜி சரவணசுந்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாகவே தனிப்படை போலீஸார் புதுக்கோட்டைப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவந்தனர். கடந்த அக். 31-ம் தேதி திருக்கோகர்ணம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட வந்த ஜானகி என்ற பெண்ணை அதிரடியாகச் சுற்றிவளைத்துக் கைதுசெய்தனர். இதில், ஜானகியின் வீட்டிலிருந்து 140 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, அவரின் கணவர் ஐயப்பனையும் கைதுசெய்தனர்.

புதுக்கோட்டை காவல் நிலையம்
புதுக்கோட்டை காவல் நிலையம்

இவர்களின் செல்போன் எண்களை ஆய்வு செய்தபோது போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில், திருப்புனவாசல் தலைமைக் காவலர் முத்துக்குமார், நகர போலீஸ் எஸ்.ஐ சந்திரசேகர் அதிக முறை கஞ்சா வியாபாரிகளிடம் பேசியது தெரியவந்தது. இந்தத் தகவல் டி.ஐ.ஜிக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. இதில், கஞ்சா வியாபாரிகளிடம் போலீஸார் இருவரும் மாமூல் வசூலித்துக்கொண்டு கஞ்சா விற்பனைக்குத் துணை போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்ய டி.ஐ.ஜி சரவணசுந்தர் உத்தரவிட்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதன்பேரில் தலைமைக் காவலர் முத்துக்குமார், எஸ்.ஐ சந்திரசேகர் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். குறிப்பாக, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் போலீஸார், கஞ்சா வியாபாரிகளிடம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை செல்போனில் பேசியது தெரியவந்திருக்கிறது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமைக் காவலர் முத்துக்குமார் கஞ்சா கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு போலீஸாகவும் பணியாற்றியிருக்கிறார்.

மாமூல் வாங்கிக்கொண்டு கஞ்சா விற்பனைக்கு உடந்தை! - தலைமைக் காவலர், எஸ்.ஐ சஸ்பெண்ட்

மேலும், கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பிலிருந்ததாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு நகர் எஸ்.ஐ அன்பழகன் அரிமளம் ஸ்டேஷனுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இதேபோல், திருக்கோகர்ணம் இன்ஸ்பெக்டர் குருநாதனுக்கும் மெமோ கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுபோல, வேறு போலீஸாருக்கும் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து திருச்சி சரக போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டிருக்கின்றனர்.

புதுக்கோட்டையில் போலீஸாரே கஞ்சா வியாபாரிகளுக்கு உடந்தையாக இருந்து கஞ்சா வியாபாரத்துக்குத் துணைபோன விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.