Published:Updated:

சமூக வலைதளத் தோழியிடம் ஆபாச வீடியோ கால்... பள்ளி ஆசிரியருக்கு மெயிலில் காத்திருந்த அதிர்ச்சி!

ஆன்லைன் மோசடி

மும்பையில் பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர் சோஷியல் மீடியாவில் பழகிய பெண்ணிடம் வெப் கேமராவில் ஆபாசமாக நடந்துகொண்டு சிக்கலில் மாட்டிக்கொண்டார்.

சமூக வலைதளத் தோழியிடம் ஆபாச வீடியோ கால்... பள்ளி ஆசிரியருக்கு மெயிலில் காத்திருந்த அதிர்ச்சி!

மும்பையில் பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர் சோஷியல் மீடியாவில் பழகிய பெண்ணிடம் வெப் கேமராவில் ஆபாசமாக நடந்துகொண்டு சிக்கலில் மாட்டிக்கொண்டார்.

Published:Updated:
ஆன்லைன் மோசடி

சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்த பிறகு குற்றங்களும் அதிகரித்துவிட்டன. அதிகமானோர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபட்டுவருகின்றனர். மும்பையில் அது போன்ற ஒரு மோசடியில் சர்வதேசப் பள்ளி ஒன்றின் முதல்வர் சிக்கிக்கொண்டிருக்கிறார். மும்பை சர்வதேசப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக இருப்பவர் சாந்தாராம் தேசாய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு சமூக வலைதளத்தில் பெண் ஒருவரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில், அந்தப் பெண்ணுடன் சாட்டிங் செய்துவந்த ஆசிரியர், போகப் போக வீடியோ காலில் பேசிவந்திருக்கிறார். மெசெஞ்சரில் சாட்டிங் செய்த இருவரும், பிறகு வாட்ஸ்அப்-க்கு மாறியிருக்கின்றனர். அடிக்கடி வீடியோ காலில் வந்த அந்தப் பெண், திடீரென ஒரு நாள் எந்தவித ஆடையும் இல்லாமல் அந்த ஆசிரியருக்கு வீடியோ கால் செய்திருக்கிறார்.

வீடியோ கால்
வீடியோ கால்

அதோடு அந்தப் பெண் தலைமை ஆசிரியரிடம் என்னைப்போல நீங்களும் ஆடைகளைக் கழற்றுங்கள் என்றும் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து, தலைமை ஆசிரியரும் வேகமாகத் தனது ஆடைகள் முழுவதையும் கழற்றிவிட்டு அந்தப் பெண் முன் வெப் கேமராவில் போஸ் கொடுத்து ஆபாசச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அந்தப் பெண் இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சில நாள்கள் அந்தத் தலைமை ஆசிரியரின் போனுக்கு பதிலளிக்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போலீஸ் சித்திரிப்பு படம்
போலீஸ் சித்திரிப்பு படம்

இந்த நிலையில், திடீரென தலைமை ஆசிரியருக்கு அந்தப் பெண் ஒரு மெயில் அனுப்பினார். அதில் உடனே பிட்காயின் மூலம் 1,200 டாலர் கொடுக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாகத் தலைமை ஆசிரியர் மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் இருக்கும் சைபர் பிரிவு போலீஸில் புகார் செய்துள்ளார்.

அந்தப் புகாரில், சமூக வலைதளத்தில் என்னுடன் பழகிய பெண், எனக்கு அனுப்பியிருக்கும் மிரட்டல் மெயிலில், `உங்களது கம்ப்யூட்டரை ஹேக் செய்து, அதிலிருக்கும் அனைத்துத் தகவல்களையும் எடுத்துக்கொண்டிருக்கிறேன். வெப் கேமராவில் நீங்கள் செய்த அனைத்துக் காரியங்களையும் பதிவு செய்து வைத்திருக்கிறேன். அந்த வீடியோவை உடனே உங்கள் நண்பர்களுக்கு என்னால் அனுப்ப முடியும். அதோடு இணையதளத்திலும் வெளியிட முடியும். அதனால், நான் என்ன சொல்கிறேன் என்று புரியும் என்று நினைக்கிறேன்... உங்களது வாழ்க்கையை என்னால் சீரழிக்க முடியும். எனவே அது போன்று செய்யாமல் இருக்க வேண்டுமானால் பிட்காயின் மூலம் 1,200 டாலரை டிரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும். அப்படிச் செய்துவிட்டால் என்னிடமிருக்கும் தகவல்கள் அனைத்தையும் அழித்துவிடுகிறேன். இந்த மெயிலை நீங்கள் திறக்கும் நாளிலிருந்து பணம் கொடுப்பதற்கான கவுன்ட்டவுன் ஆரம்பிக்கிறது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் சைபர் பிரிவு போலீஸில் புகார் செய்துள்ளார். இது குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

சைபர் மோசடி
சைபர் மோசடி

எப்படித் தடுப்பது?

இது குறித்து சைபர் பிரிவு வல்லுநர் ரிதேஷ் பாட்டியா கூறுகையில், ``எனக்கும் 2018-ம் ஆண்டு 3 ஆயிரம் டாலர் கொடுக்க வேண்டும் என்று கேட்டு மிரட்டல் மெயில் வந்தது. அதன் பிறகு அடிக்கடி போன் அழைப்புகள் வந்தன. ஆனால், நான் கண்டுகொள்ளவில்லை. இது போன்ற மிரட்டல்கள் வரும்போது ஒரு சிலர்தான் போலீஸில் புகார் செய்கின்றனர். இது போன்ற நேரங்களில் மோசடிப் பேர்வழிகளின் கோரிக்கைக்குப் பணியக் கூடாது. எந்தவித டேட்டாவையும் அழிக்காமல் அவற்றை ஸ்க்ரீன் ஷாட் எடுத்துக்கொண்டு பிரின்ட் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. அதோடு உள்ளூர் போலீஸின் சைபர் பிரிவில் இது குறித்து புகார் அளிக்க வேண்டும். கடினமான கடவுச் சொல்லைப் பயன்படுத்துவதோடு, அடிக்கடி கடவுச் சொல்லை மாற்றிக்கொள்வதும் நல்லது. சந்தேகமான எந்தவித லிங்க்குகளையும் திறக்காதீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism