Published:Updated:

குழி தோண்டி புதைக்கப்பட்ட 350 கிலோ புகையிலைப் பொருள்கள் - ரகசியத் தகவலால் பறிமுதல் செய்த அதிகாரிகள்

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள்

தூத்துக்குடியில் குழி தோண்டி டிரம்மை புதைத்து அதில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 350 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குழி தோண்டி புதைக்கப்பட்ட 350 கிலோ புகையிலைப் பொருள்கள் - ரகசியத் தகவலால் பறிமுதல் செய்த அதிகாரிகள்

தூத்துக்குடியில் குழி தோண்டி டிரம்மை புதைத்து அதில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 350 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Published:Updated:
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள்

குட்கா, ஜர்தா, ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையை தமிழக அரசு தடை செய்துள்ளது. அதனால், தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையை காவல்துறை, உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்து பறிமுதல் செய்தும் வருகின்றனர். ஆனாலும், சட்ட விரோதமாக ஆங்காங்கே புகையிலைப் பொருள்கள் விற்பனை நடந்து வருகின்றன.

குழிக்குள் புதைக்கப்பட்ட புகையிலைப் பொருள்கள்
குழிக்குள் புதைக்கப்பட்ட புகையிலைப் பொருள்கள்

இந்த நிலையில், தூத்துக்குடியில் மணலில் டிரம்மிற்குள் புகையிலைப் பொருள்களை புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வைப்பார் ஆற்றங்கரையோரத்திலுள்ள கேசவன்நகர்ப் பகுதியில் கார்த்திக் ராஜ் என்பவரது தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், தோட்டத்தில் வைத்து சட்ட விரோதமாக புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதாகவும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையிலான அதிகாரிகள் கார்த்திக் ராஜின் தோட்டத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அதில், மணலுக்குள் சுமார் 5 அடி ஆழத்தில் பிளாஸ்டிக் டிரம் ஒன்று தென்பட்டது. குழிதோண்டி டிரம்மை வெளியே எடுத்து திறந்து பார்த்தனர். அந்த டிரம்மிற்குள் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சீல் வைத்த அதிகாரிகள்
சீல் வைத்த அதிகாரிகள்

அதில், 350 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சமாகும் . இதையடுத்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அந்தத் தோட்டத்தை சீல் வைத்து மூடினர். ``பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பரிசோதனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்க உள்ளோம்" என உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism