Published:Updated:

கேமிங் செயலி மூலம் பண மோசடி; தொழிலதிபர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய பணம்! - என்ன நடந்தது?

தொழிலதிபர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய பணம்

கொல்கத்தாவில் தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், ரூ.17 கோடி ரொக்கத்தை கைப்பற்றியிருக்கின்றனர்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், ரூ.17 கோடி ரொக்கத்தை கைப்பற்றியிருக்கின்றனர்.

`E-nuggets' என்ற மொபைல் கேம் செயலி மூலம் பல கோடி ரூபாய் அளவுக்கு பணமோசடியில் ஈடுபட்டதாக, கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் அமீர் கான் என்பவர்மீது புகாரளிக்கப்பட்டது. அதனடிப்படையில் நேற்றைய தினம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேற்றைய தினம் அமீர் கானுக்குச் சொந்தமான இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அதில் அமீர் கானிடமிருந்து ரூ.17 கோடியை அதிகாரிகள் கைப்பற்றினர்.

மேலும் அமீர் கானிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கில் `E-nuggets' என்ற மொபைல் கேம் செயலியை விளம்பரப்படுத்தி மக்களிடம் பணம் பறித்தது தெரியவந்தது. அமீர் கானிடம் அமலாக்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சோதனை நடந்தபோது சட்ட ஒழுங்கை உறுதிசெய்ய, அமலாக்க இயக்குநரகத்தோடு மத்திய படைகளைச் சேர்ந்த பணியாளர்களும், வங்கி அதிகாரிகளும் உடன் இருந்தனர். கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகள் அனைத்தும் ரூ.500, ரூ.200 மற்றும் ரூ. 2,000 ரூபாய் நோட்டுகள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், அமீர் கான் விளம்பரப்படுத்திய இந்த கேமிங் செயலி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள செயலியா? என்ற கோணத்திலும் அமலாக்க இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது.