Published:Updated:

கட்டணக் கொள்ளை; விகடன் செய்தி எதிரொலி; சிறைப்பிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்து!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சிறைப்பிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்து
சிறைப்பிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்து

அதிகக் கட்டணம் வசூல் செய்த தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்தின்மீது அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

பண்டிகை நாள்களில் தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகக் கட்டணம் வசூல் செய்வது தொடர்கதையாகி வருகிறது. ராமு டிராவல்ஸ் என்ற தனியார் பேருந்து நிறுவனம் அதிகக் கட்டணம் வசூல் செய்வதாக ஆதாரத்துடன் வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நேற்று (29.10.2021) விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்தச் செய்தியின் எதிரொலியாக அந்தப் பேருந்தைச் சோதனை செய்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பேருந்தில் அதிகக் கட்டணம் வசூலிப்பதை உறுதி செய்து அந்த பேருந்தைச் சிறைப்பிடித்தனர்.

சிறைப்பிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்து
சிறைப்பிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்து

இது தொடர்பாகச் சென்னை வடக்கு சரகம் இணைப் போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``ஆம்னிப் பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூல் செய்வது தொடர்பாக வந்துள்ள புகாரின் அடிப்படையில் ஆம்னிப் பேருந்துகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், TN 20 CR0973 என்ற வாகனத்தைச் சோதனை செய்தபோது, இந்த வாகனத்தில் வழக்கத்துக்கு மாறாக அதிகக் கட்டணம் வசூல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், உரிய ஆவணங்கள் ஆய்வுக்கு இல்லாததினால், அந்த வாகனம் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறது.

கட்டணக் கொள்ளை: `அதிக கட்டணம் கொடுங்கள்!'  டிக்கெட்டை ரத்து செய்த ஆம்னி பேருந்து நிறுவனம்

இது போன்ற திடீர் வாகன சோதனைகள், சிறப்பு வாகனத் தணிக்கை குழுவினர் மூலம் வரும் 10.11.2021-ம் தேதி வரை நடத்தப்பட்டு கண்காணிக்கப்படும். வழக்கத்துக்கு மாறாக அதிகக் கட்டணம் வசூலிக்கும் மற்றும் உரியச் சாலை வரி செலுத்தாத ஆம்னி பேருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டால் சிறை பிடிக்கப்படும். எனவே ஆம்னி பேருந்துகள் எப்போதும் வசூலிக்கும் கட்டணத்தை மட்டும் வசூலிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது " என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசு அறிக்கை
அரசு அறிக்கை

தீபாவளி பண்டிகைக்கு வெளியூர்களுக்குச் செல்லும் பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பைத் தரும்படியும். இதுபோன்ற அதிகக் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால், பொதுமக்கள் 1800 425 6151 என்ற கட்டணமில்லா எண்ணிற்குப் புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அரசு சார்பில் கூறப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு