Published:Updated:

தலையில் 40 தையல்கள்; கண் முன்னே இறந்த தந்தை!- பிப்ரவரி 24-ம் தேதி இரவை விவரிக்கும் மகன்

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்

டெல்லி கலவரத்தில் மகன் கண்முன்னே தந்தை அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

டெல்லி கலவரத்தில் தன் கண் முன்னே தந்தையைப் பறிகொடுத்து நிற்கிறார் பிரம்மாபுரியைச் சேர்ந்த நிதின் குமார். பிப்ரவரி 24-ம் தேதி யதேச்சையாக வெளியில் சென்ற தந்தை, மகனை ஒரு கும்பல் கடுமையாகத் தாக்கியுள்ளது. சாலையில் பைக்கில் சென்ற ஒருவர் உதவி செய்ய, முகத்தில் ரத்தம் வழிந்த நிலையிலும் மூச்சற்ற நிலையில் கிடந்த தன் தந்தையை இருசக்கரவாகனத்தில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளார். தந்தையை ஸ்ட்ரெக்சரில் படுக்கவைத்து விட்டு ஸ்கேன் செய்வதற்காக உள்ளே சென்றுள்ளார். திரும்பி வந்தபோது தந்தையின் மரணச் செய்திதான் கிடைத்துள்ளது.

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்

இதுகுறித்து ஆங்கில ஊடகத்தில் பேசியுள்ள நிதின் குமார், ``என் மகனுக்கு மருந்து வாங்குவதற்காக வெளியில் சென்றேன். அப்போது என் தந்தையும் என்னுடன் வந்தார். எங்கள் தெருக்களைக் கடந்து பாதிதூரம் வந்திருப்போம். திடீரென ஒரு கும்பல் எங்களைத் தாக்கத்தொடங்கினர். ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. 15-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கற்களைக் கொண்டு தாக்கத்தொடங்கினர். என் தந்தையை விட்டுவிடுங்கள் எனக் கெஞ்சினேன் அவர்கள் கேட்பதாக இல்லை. கோஷங்களை எழுப்பியவாறு தொடர்ந்து தாக்கினர்.

சாலையில் வீழ்ந்துகிடந்த எங்களை வந்து சோதித்தனர். நாங்கள் இருவரும் உயிரோடு இருக்கிறோமா என்று வந்து பார்த்தனர். கையில் இருந்த குச்சிகளைக் கொண்டு தலையில் தாக்கினர். நான் இறந்ததுபோல் படுத்துக்கொண்டேன். அவர்கள் என் தந்தையைத் தொடர்ந்து தாக்கினர். அவர்கள் சென்றபின் உதவிக்காக அந்தப்பகுதியில் இருந்த மக்களிடம் கெஞ்சினேன் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை.

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்

இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர்தான் உதவி செய்தார். என் தந்தையை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தேன். அவரை ஸ்ட்ரெக்சரில் படுக்க வைத்துவிட்டு நான் ஸ்கேன் செய்யச் சென்றேன். திரும்பிவந்து பார்த்தபோது என் தந்தை இறந்துவிட்டதாக கூறினர்” என்றார் உடைந்த குரலில். நிதின் நெற்றியில் 40 தையல்கள் போடப்பட்டுள்ளன. கலவரக்காரர்கள் தாக்கியதில் அவரது கண்கள் சிவந்து காணப்படுகின்றன.

அடுத்த கட்டுரைக்கு