Published:Updated:

நீதிமன்ற வளாகத்திலேயே நடந்த ஆணவக்கொலை: தந்தையால் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் - பாகிஸ்தானில் அதிர்ச்சி

துப்பாக்கி ( pixabay )

மருத்துவரை திருமணம் செய்துகொண்ட மகளை நீதிமன்ற வளாகத்திலேயே தந்தை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நீதிமன்ற வளாகத்திலேயே நடந்த ஆணவக்கொலை: தந்தையால் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் - பாகிஸ்தானில் அதிர்ச்சி

மருத்துவரை திருமணம் செய்துகொண்ட மகளை நீதிமன்ற வளாகத்திலேயே தந்தை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
துப்பாக்கி ( pixabay )

பாகிஸ்தானின் கராச்சியில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியான வஜிரிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர், அந்தப் பகுதியிலிருந்த மருத்துவர் ஒருவரை விரும்பி, வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டார். இதை எதிர்த்து பெண்ணின் குடும்பத்தார் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில், `பெண்ணுடைய விருப்பத்தின் அடிப்படையில் திருமணம் நடந்ததா... அல்லது விருப்பம் இல்லாமல் திருமணம் நடந்ததா?’ என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நீதிமன்றத்தில், புதுமணப் பெண் நேற்று வாக்குமூலம் அளிக்க வந்திருந்தார். அப்போது, நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த அந்தப் பெண்ணின் தந்தை, தன் மகளை துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே புதுமணப் பெண் பலியானார். காவல் அதிகாரி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. காவல்துறை அதிகாரிகள் குற்றவாளியை மடக்கிப் பிடித்து கைதுசெய்தனர்.

கொலை
கொலை
மாதிரிப் படம்

இது தொடர்பாகப் பேசிய பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையம் (HRCP), "கடந்த பத்தாண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 650 ஆணவக்கொலைகள் நடக்கின்றன. பெரும்பாலான கொலைகள் போதுமான கவனம் பெறாமல் இருப்பதால், உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் எனக் கருதுகிறோம். இந்தக் கொலைகளுக்கு பின்னனியில், தந்தை, சகோதரர் அல்லது வேறு ஆண் உறவினர் என யாரோ ஒருவர் இயங்குகின்றனர்" எனத் தெவித்திருக்கிறது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.