Published:Updated:

உத்தரபிரதேசம்: தாமதமான உணவு; முற்றிய வாக்குவாதம்! - சுட்டுக்கொல்லப்பட்ட ஹோட்டல் உரிமையாளர்

கொலை

பூரி மசாலா வர தாமதமானதால் உணவகத்தில் வேலை செய்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் அந்த ஸ்விக்கி பணியாளர். அப்போது ஏற்கெனவே குடி போதையில் இருந்த மற்ற மூன்று பேரும் கடை பணியாளருடன் சண்டையிட துவங்கியுள்ளனர்.

உத்தரபிரதேசம்: தாமதமான உணவு; முற்றிய வாக்குவாதம்! - சுட்டுக்கொல்லப்பட்ட ஹோட்டல் உரிமையாளர்

பூரி மசாலா வர தாமதமானதால் உணவகத்தில் வேலை செய்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் அந்த ஸ்விக்கி பணியாளர். அப்போது ஏற்கெனவே குடி போதையில் இருந்த மற்ற மூன்று பேரும் கடை பணியாளருடன் சண்டையிட துவங்கியுள்ளனர்.

Published:Updated:
கொலை

உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டா நகரத்தை சேர்ந்த உணவக உரிமையாளர், உணவு வழங்க தாமதமானதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கொலையை விசாரிக்கும் காவலர்களிடம் இது தொடர்பாக பேசுகையில், `நொய்டாவில் உள்ள மித்ரா என்னும் தங்கும் விடுதியுடன் அமைந்திருக்கும் உணவகத்தில் ஆர்டருக்காக சிக்கன் பிரியாணி மற்றும் பூரி மசாலா வாங்க சென்றுள்ளார் ஸ்விக்கி உணவு டெலிவரி நிறுவன பணியாளர் ஒருவர். அப்போது பைக்கில் வந்த மூன்று பேர் உணவகத்தின் அருகில் அவரிடம் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். வந்த மூவரில் ஒருவர் மற்றொரு உணவு விநியோக நிறுவனத்தில் பணிபுரிவதால் அவரிடம் வேலை குறித்து பேசியுள்ளார்.

இதனிடையே பூரி மசாலா வர தாமதமானதால் உணவகத்தில் வேலை செய்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் அந்த ஸ்விக்கி பணியாளர். அப்போது ஏற்கெனவே குடி போதையில் இருந்த மற்ற மூன்று பேரும் கடை பணியாளருடன் சண்டையிட துவங்கியுள்ளனர்.

கொலை
கொலை

அப்போது குறுக்கிட்ட உணவகத்தின் உரிமையாளர் சுனில் அகர்வாலை தலையில் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர்.

சம்பவத்திற்கு பின் சுனில் அகர்வால் சுற்றி இருந்தவர்களால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பைக்கில் வந்த மூவரும் டெலிவரி நிறுவன ஊழியரும் தப்பி சென்றுள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உணவகத்திற்கு அருகில் வசிக்கும் ராகேஷ் கூறுகையில், "உணவக பணியாளர் என்னிடம் சுனில் அகர்வால் சுடப்பட்டதை கூறினார். நான் பார்த்த போது அவர் உயிருடன் இருந்தார். நான் முதலில் 100-க்கு அழைத்தேன். பின்னர் பின் ஆம்புலன்ஸுக்கு அழைத்தேன். எனினும் நாங்களே எங்கள் வாகனத்தில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம்" என்றார்.

சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரித்த காவலர்கள் புதன் அதிகாலையில் பைக்கில் வந்த மூன்று பேரையும் கைது செய்தனர். கைது நடவடிக்கையின் போது ஒருவருக்கு தொடையில் குண்டு பாய்ந்தது. குறிப்பிட்ட டெலிவரி நிறுவன ஊழியர் தப்பிவிட்டார்.

உத்தரபிரதேசம்: தாமதமான உணவு; முற்றிய வாக்குவாதம்! - சுட்டுக்கொல்லப்பட்ட ஹோட்டல் உரிமையாளர்

இந்த சம்பவம் குறித்து ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடந்துள்ள சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. சம்பந்தப்பட்ட நபரின் தகவல்களை அளிக்க காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளோம்" என குறிப்பிட்டுள்ளனர். மேலும் தங்கள் உணவு விநியோகிஸ்தர்கள் அனைவரின் நீதிமன்ற வழக்குகள் மற்றும் குற்ற பின்னணி சரிபார்த்த பின்னரே அனுமதிக்கிறோம் எனவும் தெரிவித்தனர்.

இதனிடையே தற்போது, குறிப்பிட்ட ஸ்விக்கி நிறுவன ஊழியர் இந்த கொலையை செய்யவில்லை என்றும் மற்ற மூவருக்கு தான் இதில் பங்கு இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த விவகாரத்தில் விசாரணை நடந்து வருகிறது.