Published:Updated:

சென்னை: 16 வயது சிறுமி 4 மாத கர்ப்பம்... கூண்டோடு சிக்கிய ஹவுஸ் ஓனர் குடும்பம்!

சிறுமி

சென்னை திருமுல்லைவாயலில் வயிற்றுவலியால் துடித்த 16 வயது சிறுமியை மருத்துவமனையில் சேர்த்தபோது அவர், 4 மாத கர்ப்பம் எனத் தெரியவந்தது. சிறுமி அளித்த தகவலின்படி ஹவுஸ் ஓனர் குடும்பத்துடன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை: 16 வயது சிறுமி 4 மாத கர்ப்பம்... கூண்டோடு சிக்கிய ஹவுஸ் ஓனர் குடும்பம்!

சென்னை திருமுல்லைவாயலில் வயிற்றுவலியால் துடித்த 16 வயது சிறுமியை மருத்துவமனையில் சேர்த்தபோது அவர், 4 மாத கர்ப்பம் எனத் தெரியவந்தது. சிறுமி அளித்த தகவலின்படி ஹவுஸ் ஓனர் குடும்பத்துடன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
சிறுமி

திருவள்ளுர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (34). இவரிின் அம்மா விஜயா (65). வெங்கடேசனின் அக்கா லலிதா (36). வெங்கடேசனுக்கு இரண்டு தடவை திருமணம் நடந்தும், அவரின் மனைவிகள் பிரிந்து சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதனால் அக்கா, அம்மாவுடன் வெங்கடேசன் குடியிருந்துவந்திருக்கிறார். இந்த நிலையில், வெங்கடேசனுக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்கு கணவரைப் பிரிந்து வாழும் பெண், தன்னுடைய 16, 14 வயதுடைய மகள்கள், மகனுடன் வசித்துவந்திருக்கிறார். அந்தப் பெண்ணின் மகளை வெங்கடேசனின் அக்கா லலிதா, தன்னுடைய தம்பிக்குப் பெண் கேட்டிருக்கிறார். அதற்கு அந்தப் பெண், என்னுடைய மகளுக்கு இன்னும் திருமண வயது வரவில்லை என்று கூறி பெண் கொடுக்க மறுத்திருக்கிறார்.

லலிதா
லலிதா

இதையடுத்து அந்தப் பெண்ணின் 16 வயது சிறுமியை அடிக்கடி விஜயாவும் லலிதாவும் சந்தித்து அன்பாகப் பேசிவந்திருக்கின்றனர். அதன் பிறகு வெங்கடேசனும் சிறுமியுடன் பழகிவந்திருக்கிறார். இதையடுத்து சிறுமியிடம் உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறி, வெங்கடேசன் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சொல்லப்படுகிறது. வெங்கடேசனின் அம்மா, அக்காளுக்கு தெரிந்தே இந்தக் கொடுமை நடந்திருக்கிறது. வெங்கடேசனுடன் நெருங்கிப் பழகுவதை சிறுமி தன்னுடைய வீட்டில் சொல்லாமல் மறைத்துவந்திருக்கிறார். இந்த நிலையில் சிறுமியை மூளைச்சலவை செய்த வெங்கடேசனும், அவரின் குடும்பத்தினரும் பணம் தருவதாகக் கூறி அவரைப் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தியதாகத் தெரிகிறது.

இதையடுத்து சிறுமியுடன் வெங்கடேசனின் அக்கா லலிதாவின் ஆண் நண்பர்கள் பாலாஜி, வெங்கப்பன், கிரி ஆகியோரும் நெருங்கிப் பழகிவந்திருக்கின்றனர். இந்தச் சூழலில் சிறுமிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. அது குறித்து சிறுமியிடம் விசாரித்தபோது வயிறு வலிப்பதாக மட்டும் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து சிறுமியை அருகிலுள்ள மருத்துவமனையில் அவளின் குடும்பத்தினர் சேர்த்தனர். அப்போது சிறுமி நான்கு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் அம்மா, தன்னுடைய மகளிடம் என்ன நடந்தது என்று விசாரித்தார். அப்போதுதான் சிறுமி, வெங்கடேசன், விஜயா, லலிதா, லலிதாவின் ஆண் நண்பர்கள் ஆகியோருடன் நெருங்கிப் பழகியதையும், தனக்கு நடந்த கொடுமைகளையும் கண்ணீர்மல்கத் தெரிவித்திருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் அம்மா, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

விஜயா
விஜயா

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லதா, வீட்டின் உரிமையாளர் வெங்கடேசன், அவரின் அம்மா விஜயா,அக்கா லலிதா, லலிதாவின் ஆண் நண்பர் வெங்கப்பா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் சிறுமியைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து வீட்டின் உரிமையாளர் வெங்கடேசன், அவரின் அம்மா விஜயா, அக்கா லலிதா, வெங்கப்பா ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் கிரி, பாலாஜி ஆகியோரை போலீஸார் தேடிவருகின்றனர். கைதான நான்கு பேரும் திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.