Published:Updated:

ஒத்தி பணத்தை திருப்பிக் கேட்ட நபர்... மனைவியுடன் சேர்ந்து அதிர்ச்சி கொடுத்த வீட்டு உரிமையாளர்!

கைது செய்யப்பட்ட பவுன்தாய்
கைது செய்யப்பட்ட பவுன்தாய்

முருகனிடம் ஒத்திக்கான பணத்தைக் கேட்டுள்ளார். பணத்தைக் கொடுக்க முருகன் தாமதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே ஒத்திக்கானப் பணத்தைக் கேட்டவரை, வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரின் மனைவி இருவரும் சேர்ந்து கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`லோனை நான் கட்டிக்கிறேன்; ஆயிரம் ரூபாய் வாங்கிக்கங்க!’ - தேனி பழங்குடியினப் பெண்களை அதிரவைத்த மோசடி
கைது செய்யப்பட்டுள்ள முருகன்
கைது செய்யப்பட்டுள்ள முருகன்

கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கருமாரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). முந்திரித் தோட்டத்தில் வேலை பார்க்கும் இவருக்கு மனைவி செல்வராணி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அப்பகுதியில் வசிக்கும் முருகன் (வயது 50) என்பவருக்குச் சொந்தமான வீட்டை ரூ.80,000-த்துக்கு ஒத்திக்கு எடுத்து குடியிருந்துவந்துள்ளனர்.

இந்த நிலையில், மூன்று ஆண்டுகள் ஒத்திக் காலம் முடிந்து மூன்று மாதம் ஆன நிலையில், வேறு வீட்டுக்கு குடிபோக திட்டமிட்டு, வீடு பார்த்துவந்துள்ளார் சிவக்குமார். தொடர்ந்து, முருகனிடம் ஒத்திக்கான பணத்தைக் கேட்டுள்ளார். பணத்தைக் கொடுக்க முருகன் தாமதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பவுன்தாய்
கைது செய்யப்பட்ட பவுன்தாய்

இந்த நிலையில், நேற்று இரவு பணத்தைக் கேட்டு முருகனின் வீட்டுக்குச் சென்ற சிவக்குமாரிடம், முருகன் மற்றும் அவரின் மனைவி பவுன்தாய் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், தனது வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்துவந்த முருகன், சிவக்குமாரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே பலியானார் சிவக்குமார். ஒத்தி காலம் முடிந்து, பணத்தைத் திருப்பிக் கேட்ட நபரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்துக்கு விரைந்த ராயப்பன்பட்டி போலீஸார், முருகன் மற்றும் அவரின் மனைவி பவுன்தாய் இருவரையும் கைது செய்தனர்.

`சிறுமிக்கு நேர்ந்த துயரம்' - தேனி இளைஞருக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை #TamilnaduCrimeDiary
பின் செல்ல