Published:Updated:

நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக வாட்ஸ்அப் பதிவு; அமராவதி மருந்துக்கடைக்காரர் கொலைசெய்யப்பட்டது எப்படி?

மருந்துக்கடைக்காரர் கொலை

அமராவதியில் மருந்துக்கடைக்காரர் கொலைசெய்யப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக வாட்ஸ்அப் பதிவு; அமராவதி மருந்துக்கடைக்காரர் கொலைசெய்யப்பட்டது எப்படி?

அமராவதியில் மருந்துக்கடைக்காரர் கொலைசெய்யப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
மருந்துக்கடைக்காரர் கொலை

மகாராஷ்டிரா மாநிலம், அமராவதியில் கடந்த மாதம் 21-ம் தேதி மருந்துக்கடை நடத்திவந்த உமேஷ் என்பவர் இரவில் தனது கடையை அடைத்துவிட்டு வீட்டுக்குச் செல்லும்போது, வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம் ஆரம்பத்தில் ஒரு கொலை வழக்கமாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால் கொலை நடந்து ஒரு வாரம் கழித்து, ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் பா.ஜ.க பிரமுகர் நுபுர் ஷர்மா நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த சர்ச்சைக்குறிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட டெய்லர் ஒருவரை இரண்டு பேர் பட்டப்பகலில் தலைதுண்டித்துக் கொலைசெய்தனர். தாலிபன் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புகள் கொலைசெய்வது போன்று கொலைசெய்துவிட்டு சென்றனர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் அமராவதியில் நடந்த கொலையும் இத்தோடு தொடர்புடையது என்று தெரியவந்தது.

நுபுர் ஷர்மா
நுபுர் ஷர்மா

போலீஸார் நடத்திய விசாரணையில் கொலைசெய்யப்பட்ட உமேஷ் `பிளாக் பிரீடம்' என்ற வாட்ஸ்அப் குரூப்பில் நுபுர் ஷர்மா தெரிவித்த கருத்துக்கு ஆதரவாக கருத்துப் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்ட வாட்ஸ்அப் குரூப்பில் முஸ்லிம்களும் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அவர்கள்தான் இந்தப் படுகொலையை செய்துள்ளனர். இந்தக் கொலை தொடர்பாக மொத்தம் 7 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொலை
கொலை

அவர்களிடம் விசாரித்ததில் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டதற்காகத்தான் கொலைசெய்ததாக ஒப்புக்கொண்டனர். கொலையாளிகள் கடந்த மாதம் கொலைசெய்வதற்கு சில நாள்களுக்கு முன்பே தொடர்ச்சியாக உமேஷ் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர்.

என்.ஐ.ஏ.
என்.ஐ.ஏ.

அவர்கள் உமேஷ் எப்போது கடையை அடைத்துவிட்டு செல்கிறார் என்று கண்காணித்து வந்தனர். வழக்கமாக இரவு 10:30 மணிக்கு கடையை அடைப்பதை தெரிந்துகொண்டு அதற்கு தக்கபடி ஜூன் 20-ம் தேதியே உமேஷைக் கொலைசெய்ய திட்டமிட்டிருந்தனர். அவர்கள் இதற்காக இரவு 10 மணிக்கு மேல் சென்றபோது, அன்று உமேஷ் கடையை 9:30 மணிக்கே அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றிருந்தார். இதனால் மறுநாள் தங்களது காரியத்தை நிறைவேற்றியுள்ளனர். இந்தக் கொலை சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கிறது. இரண்டு பேர் சேர்ந்து உமேஷ் கழுத்தை அறுத்துள்ளனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சி தனது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரித்து வருகிறது.