Published:Updated:

ரூ.21,000 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தல்; வெளிநாட்டு அழைப்புகள்! - சென்னை தம்பதி சிக்கியது எப்படி?

ஹெராயின் வழக்கில் கைதான தம்பதியர் தங்கியிருந்த வீடு

இன்டர்நேஷனல் ஹெராயின் போதை கடத்தல் கும்பலுடன் சென்னை தம்பதியருக்குத் தொடர்பு இருப்பதை மோப்பம் பிடித்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீஸார், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.

ரூ.21,000 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தல்; வெளிநாட்டு அழைப்புகள்! - சென்னை தம்பதி சிக்கியது எப்படி?

இன்டர்நேஷனல் ஹெராயின் போதை கடத்தல் கும்பலுடன் சென்னை தம்பதியருக்குத் தொடர்பு இருப்பதை மோப்பம் பிடித்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீஸார், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.

Published:Updated:
ஹெராயின் வழக்கில் கைதான தம்பதியர் தங்கியிருந்த வீடு

ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரான் வழியாக, குஜராத் துறைமுகத்துக்கு வந்த சரக்கு கப்பலில் 21,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 3,000 கிலோ ஹெராயின் பவுடரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஹெராயின் பவுடரை முகபவுடர் பார்சல்களுடன் மறைத்துவைத்து கன்டெய்னரில் கடத்தல் கும்பல் அனுப்பிவைத்திருந்தது. அதைக் கண்டுபிடித்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், விஜயவாடா சத்தியநாராயணபுரத்திலுள்ள ஆஷி டிரேடிங் கம்பெனி என்ற பெயரிலான ஆவணங்கள் சிக்கின. அதனால் அந்த கம்பெனி குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

தம்பதியர் தங்கியிருந்த அப்பார்ட்மென்ட்
தம்பதியர் தங்கியிருந்த அப்பார்ட்மென்ட்

விசாரணையில் அந்த கம்பெனிக்கும் சென்னை போரூர், கொளப்பாக்கம், வ.உ.சி தெருவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் சுதாகர், அவரின் மனைவி வைஷாலி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்த கம்பெனியின் ஜிஎஸ்டி நம்பர் மூலம்தான் சரக்குக் கப்பலில் பொருள்கள் குஜராத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. அதனால் தம்பதியரிடம் விசாரணை நடத்தி, இருவரையும் குஜராத் சிறையில் அடைத்தனர். ஹெராயின் கடத்தல் சம்பவத்தில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருக்கின்றன. இந்த வழக்கில் ஆப்கானிஸ்தான் தாலிபன் அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர், உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர், சென்னை தம்பதி உட்பட எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் பேசினோம். ``கைதான சுதாகர், விஜயவாடாவில் கல்வி பயின்றிருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு அவர் சென்னையிலுள்ள அப்பார்ட்மென்ட்டில் முதல் தளத்தில் குடும்பத்தோடு குடியிருந்து வந்திருக்கிறார். ஆரம்பத்தில் சுதாகர், சரக்கு போக்குவரத்து நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றிவந்திருக்கிறார். பின்னர் அவர் ஆந்திரா, உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் சரக்கு போக்குவரத்து கம்பெனிகளை நடத்திவருவதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. சுதாகரின் சென்னை கம்பெனி கிழக்கு கடற்கரை சாலையில் இருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. அதனால் தமிழகத்திலும் இந்தத் தம்பதி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டார்களா என விசாரித்துவருகிறோம். மேலும் தம்பதியருக்கும் தாலிபன்களுக்கும் எப்படித் தொடர்பு ஏற்பட்டது என்று விசாரணை நடத்த சுதாகர், வைஷாலியை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது" என்றனர்.

சுதாகர்
சுதாகர்

ஹெராயின் கடத்தல் வழக்கில் கைதாகியிருக்கும் சுதாகர், வைஷாலி குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு போலீஸாரின் கண்காணிப்பில் இருந்துவருகிறது. அங்கு சென்று விசாரித்தபோது, `சுதாகரும் வைஷாலியும் குழந்தைகளோடு வீட்டில் தங்கியிருந்தனர். இருவரும் ஆன்மிகத்தில் அதிக பற்றுக்கொண்டவர்கள். மற்றப்படி யாரிடமும் எதுவும் பேச மாட்டார்கள். அவர்கள் வருவதும் வெளியில் செல்வதும் என எதுவும் தெரியாது. அமைதியாகவே இருப்பார்கள். இருவரையும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதுசெய்திருப்பது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சில தினங்களுக்கு முன்பு அதிரடியாக சிலர் அப்பார்ட்மென்ட்டுக்குள் வந்தனர். பின்னர் சுதாகர், வைஷாலியிடம் விசாரித்து காரில் ஏற்றிச் சென்றுவிட்டனர். குழந்தைகள் மட்டும் தனியாக வீட்டில் இருந்தனர். அவர்களையும் உறவினர் ஒருவர் வந்து அழைத்துச் சென்றுவிட்டார். தற்போது அந்த வீட்டை பூட்டியிருக்கிறார்கள்’ என்று கூறினர்.

சுதாகர், வைஷாலி இருவரும் பயன்படுத்திய செல்போன் நம்பர்களை போலீஸார் ஆய்வு செய்தபோது அதில் வெளிநாட்டிலிருந்து சில அழைப்புகள் வந்திருப்பதைக் கண்டுபிடித்திருக்கின்றனர். குறிப்பாக, போதைப்பொருள் கடத்தல் கும்பல், சுதாகர், வைஷாலி நடத்திவரும் கம்பெனிகளுக்கு முக பவுடரோடு ஹெராயினையும் அனுப்பி வந்திருக்கின்றனர். இந்தக் கடத்தலில் பெரிய நெட்வொர்க் உள்ளது. அவர்களின் பின்னணி குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். சென்னை தம்பதியருக்கு சிலர் உதவி செய்த தகவலும் கிடைத்திருக்கிறது. அவர்களின் பட்டியலையும் போலீஸார் சேகரித்துவருகின்றனர்.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சென்னை தம்பதியர் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.