Published:Updated:

ரூ.3 கோடி கிழிந்த ரூபாய் மோசடியில் வங்கி அதிகாரிகள் சிக்கியது எப்படி?

மோசடி

கோவையில் ரூ3.28 கோடி மோசடி செய்த பேங்க் ஆஃப் பரோடா வங்கி மேலாளர் உள்ளிட்ட 6 பேர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்திருக்கிறது. அதிகாரிகளே மோசடியில் ஈடுபட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.3 கோடி கிழிந்த ரூபாய் மோசடியில் வங்கி அதிகாரிகள் சிக்கியது எப்படி?

கோவையில் ரூ3.28 கோடி மோசடி செய்த பேங்க் ஆஃப் பரோடா வங்கி மேலாளர் உள்ளிட்ட 6 பேர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்திருக்கிறது. அதிகாரிகளே மோசடியில் ஈடுபட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
மோசடி

கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் பேங்க் ஆஃப் பரோடா வங்கி இயங்கி வருகிறது. அங்கு மக்களிடம் கிழிந்த நிலையில் பெறப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள், பண பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே பண சேமிப்புக் கிடங்கில் இருந்து ரூ.70.40 கோடி ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் ரூபாய் நோட்டுகளை சரிபார்த்துக்கொண்டிருந்தனர்.

கோவை
கோவை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்போது ரூ.3.28 கோடி குறைவாக இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக விளக்கம் கேட்ட ரிசர்வ் வங்கி உயர் அதிகாரிகள், அங்கு நேரடியாக ஆய்வும் செய்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது அங்கு பதிவான சிசிடிவி கேமராவில் பாதுகாப்புப் பணியில் இருந்த கனகராஜ் என்பவர், கிழிந்த மற்றும் பழைய ரூபாய் நோட்டுகளை எடுத்து வேறு இடத்தில் பதுக்கியது தெரியவந்தது. விசாரணையில் இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

சி.பி.ஐ
சி.பி.ஐ

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் சி.பி.ஐ-யில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.

அதில் வங்கியின் மேலாளராக இருந்த ராஜன் மற்றும் செல்வராஜன், ஜெயசங்கரன், ஶ்ரீகாந்த், கனகராஜ் உள்ளிட்டோர் இணைந்து ரூ.3.28 கோடி திருடி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் மீது கூட்டு சதி, மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வங்கி மோசடி
வங்கி மோசடி
vikatan

வங்கி மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளே மோசடியில் ஈடுபட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.