Published:Updated:

பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்: சிறையிலிருந்து விக்கி தப்பியது எப்படி? | மினி தொடர் - 3

பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்

பஞ்சாப் சிறையிலிருந்து விக்கி தன்னுடைய நண்பர்களுடன் பட்டப்பகலில் தப்பிச் சென்றது எப்படி?

பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்: சிறையிலிருந்து விக்கி தப்பியது எப்படி? | மினி தொடர் - 3

பஞ்சாப் சிறையிலிருந்து விக்கி தன்னுடைய நண்பர்களுடன் பட்டப்பகலில் தப்பிச் சென்றது எப்படி?

Published:Updated:
பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்
பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்: சித்து மூஸ் வாலா கொலையும் வெளிவந்த கேங் வார்களும்... மினி தொடரின் முதல் பாகத்தைப் படிக்க, கீழே க்ளிக செய்யவும்..!
பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்: கிரிமினல்களும், சில அரசியல் கனவுகளும் |மினி தொடரின் இரண்டாம் பாகத்தைப் படிக்க கீழே க்ளிக செய்யவும்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பஞ்சாப்பில் மிகப்பெரிய கிரினல்களில் ஒருவராகக் கருதப்படும் விக்கியை அவரின் தந்தை, தன்னுடைய மகன் மிகப்பெரிய விளையாட்டு வீரனாக வர வேண்டும் என நினைத்து பயிற்சி மையத்துக்கு 2007-ம் ஆண்டு அனுப்பிவைத்தார். பயிற்சி மையத்தில் விக்கிக்கு லவ்லி பாபா, பிரேம் லஹோரியா ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. அவர்களும் விளையாட்டு பயிற்சிக்காகத்தான் வந்திருந்தனர். விக்கிக்கு எல்லைப் பாதுகாப்பு படையில் ஹெட் கான்ஸ்டபிள் வேலை கொடுப்பதாகச் சொன்னார்கள். ஆனால் விக்கியின் எதிர்காலக் கனவு வேறு மாதிரி இருந்தது. அந்த வேலையை நிராகரித்துவிட்டார். அப்போதுதான் விளையாட்டுப் பயிற்சியின்போது சிறிய சண்டை வந்தது.

விக்கி
விக்கி

அந்தச் சண்டைதான் விக்கியை விளையாட்டிலிருந்து வேறு வழிக்கு மாற்றியது. அந்தச் சண்டையைத் தொடர்ந்து விக்கி மீது புகார் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அடிக்கடி இது போன்ற காரியங்களில் ஈடுபட்ட விக்கி, தன்னுடன் இருந்த பிரேம் லஹோரியாவுடன் சேர்ந்துகொண்டு குற்றங்களில் ஈடுபட ஆரம்பித்தார். பிரேம் லஹோரியாவின் நண்பன் சுக்கா கஹ்லோன்.

ஜலந்தரில் பிரேம், விக்கி ஆகியோர் சுக்காவின் வீட்டில்தான் தங்கியிருந்தனர். 2008-ம் ஆண்டு சுக்காவுக்கும் விக்கியின் மற்றொரு நண்பர் லவ்லி பாபாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே ஒருமுறை ஜிம்மில் நடந்த சண்டையில் லவ்லி பாபாவை சுக்கா படுகொலை செய்துவிட்டார். இந்தப் படுகொலைக்குப் பழிவாங்காமல் விட மாட்டேன் என்று விக்கி சபதம் எடுத்தார். இதற்கு அவருடைய மற்றொரு நண்பர் பிரேம் லஹோரியாவும் உதவுவதாகச் சொன்னார். சொன்னபடி பஞ்சாப்பின் பக்வாரா போலீஸ் காவலில் இருந்தபோது 2015-ம் ஆண்டு சுக்காவை, விக்கியும் அவருடைய ஆட்களும் சேர்ந்து கொலைசெய்தனர். அதே ஆண்டு, டிசம்பர் மாதம் சுக்கா படுகொலைக்காக விக்கியை போலீஸார் கைதுசெய்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆரம்பத்தில் ரோபர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விக்கி, அங்கிருந்த கைதிகளுடன் சண்டையிட்டதால் பாட்டியாலா நாபா சிறைக்கு மாற்றப்பட்டார். ஓர் ஆண்டு சிறையில் இருந்த விக்கி சிறையில் தொடர்ந்து இருக்க விரும்பவில்லை. இதனால் வெளியிலிருக்கும் தன்னுடைய நண்பர்கள் மற்றும் சிறைக்குள் தன்னுடன் சேர்ந்த புதிய நண்பர்களுடன் சேர்ந்து சிறையிலிருந்து தப்பிக்கத் திட்டமிட்டார். இதற்காக மூன்று மாதங்கள் ஸ்கெட்ச் போட்டு திட்டத்தை நிறைவேற்றினார். 2016-ம் ஆண்டு, நவம்பர் 27-ம் தேதி விக்கி தன் திட்டத்தை நிறைவேற்ற நாள் குறித்தார். சிறையிலிருந்து காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இரண்டு பேர் உட்பட மொத்தம் ஆறு பேர் தப்பிச்செல்லத் திட்டமிட்டனர்.

தப்பியது எப்படி?

விக்கி
விக்கி

விக்கி அடைக்கப்பட்டிருந்த சிறைக்கு விக்கியின் ஆட்கள், காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் ஆட்கள் என ஆறு பேர் இரண்டு கார்களில் வந்தனர். அவர்களில் ஒருவனுக்குக் கைவிலங்கு போட்டுக்கொண்டனர். கைவிலங்கு போட்டிருப்பவனைக் கைதியாகவும், மற்றவர்கள் தங்களை போலீஸாராகவும் காட்டிக்கொண்டனர். அவர்கள் கைதியை சிறையில் ஒப்படைக்க வந்திருப்பதாகச் சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். காலை 8:30 மணிக்கே இந்த நாடகம் அரங்கேறத் தொடங்கியது. அவர்கள் சிறை கேட்டுக்குச் சென்றனர். கேட்டில் இருந்தவர் கதவைத் திறந்தபோது ஆறு பேரும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டபடி சிறைக்குள் சென்றனர். அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குச் சென்றனர். அங்கிருந்த விக்கி உட்பட ஆறு பேரையும் அழைத்துக்கொண்டு மீண்டும் துப்பாக்கியால் சுட்டபடியே கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்றனர்.

இது, காலை 8:30 மணிக்கு தொடங்கி 8:50க்கு முடிந்துவிட்டது. தப்பிச்சென்றவர்கள் நேராக காரில் சென்றபோது ரயில்வே கேட் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் நேரத்தை வீணாக்க விரும்பாமல் மீண்டும் வந்த வழியே அதாவது சிறை இருந்த வழியாகவே அவர்கள் கார்களில் தப்பிச் சென்றனர். சிறை அருகில் வந்தபோது துப்பாக்கியால் சுட்டபடியே சென்றனர். அவர்கள் அனைவரும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஹரியானா நோக்கிச் சென்றனர். காலை 9 மணிக்குப் பிறகுதான் இந்தச் செய்தி அனைவருக்கும் தெரியவந்தது. அவர்கள் எங்கு சென்றனர் என்பது குறித்தும், எப்படி விக்கி கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும் அடுத்த பகுதியில் பார்ப்போம்..!