Published:Updated:

`கோழிப் பண்ணையில் லேப்டாப்; சீக்ரெட் வீடியோக்கள்!' -எப்படியெல்லாம் ஏமாற்றுவார் இன்ஜினீயர் சுஜி?

இன்ஜினீயர் சுஜி என்கிற காசி
இன்ஜினீயர் சுஜி என்கிற காசி

`17 வயது முதல் 40 வயது வரையிலான பெண்கள்தாம் இன்ஜினீயர் காசி என்கிற சுஜியின் டார்கெட்' எனப் பாதிக்கப்பட்ட மாணவிகள் அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் நாகர்கோவிலைச் சேர்ந்த இன்ஜினீயர் காசி என்கிற சுஜி, பழக்கமானார். பின்னர், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி லட்சக்கணக்கில் பணத்தை பறித்ததாக குமரி மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாத்திடம் பெண் டாக்டர் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸார், வழக்கு பதிந்து காசி என்கிற சுஜியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இன்ஜினீயர் சுஜி
இன்ஜினீயர் சுஜி
`இன்ஸ்டாகிராம் நட்பு; வினையாக முடிந்த விபரீதம்'- சென்னை டாக்டரை ஏமாற்றிய குமரி இன்ஜினீயர்

நாகர்கோவிலைச் சேர்ந்த இன்ஜினீயர் சுஜி என்கிற காசி குறித்து தினந்தோறும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன. சுஜியால் பாதிக்கப்பட்டவர்கள், தயங்காமல் புகாரளிக்கலாம் எனக் கூறிய குமரி மாவட்ட போலீஸார், அதற்கென செல்போன் நம்பர் ஒன்றையும் வெளியிட்டனர். இந்தச் சூழலில் சுஜியுடன் கல்லூரியில் படித்த மாணவி ஒருவர், புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தன்னைக் காதலித்த சுஜி என்கிற காசி, திருமணம் செய்வதாகக்கூறி நகைகள், பணத்தை ஏமாற்றிவிட்டதாகக் கூறியுள்ளார். அதன்பேரில் சுஜி மீது புதியதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுஜியால் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையினரிடம் புகாரளிக்க தயக்கம் தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் அவர்களில் சிலருக்குத் திருமணமாகிவிட்டது. மேலும் சிலர், சுஜியின் நட்பில் ஏற்பட்ட கசப்பான சம்பவத்தைக் கனவாக மறந்து புதிய வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். ஆனால், சுஜியுடன் பழகிய பெண்களின் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் எல்லாம் செல்போன்கள், லேப்டாப்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில, காவல்துறையினரிடம் சிக்கியுள்ளன.

கழுத்தில் செயின், சினிமா ஹீரோ போல காஸ்ட்டியூம் என எப்போதும் பந்தாவாகவே சுஜியின் ஃலைப் ஸ்டைல் இருக்கும். அதைப் பார்த்தும் அவரின் சமூகவலைதள ஸ்டேட்டஸ்களைப் பார்த்தும் பெண்கள் எளிதில் ஏமாந்துவிடுவார்கள்.
பாதிக்கப்பட்ட மாணவி
சுஜி என்கிற காசி
சுஜி என்கிற காசி
`இன்ஸ்டாகிராம் தொழிலதிபர்.. இளம் பெண்களைக் குறிவைத்து மோசடி!’ -யார் இந்த இன்ஜினீயர் சுஜி?

அவை வெளியில் வராத வகையில் போலீஸார் நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட பெண்களிடம் ரகசியமாக விசாரித்து வருகின்றனர். அதில், சில பெண்கள், `தயவு செய்து சுஜி மீது புகாரளிக்க முடியாது. எங்கள் நிலைமையைப் புரிந்துகொள்ளுங்கள்' என்று தெரிவித்துள்ளனர். சுஜியை கைது செய்த போலீஸார், இந்தச் சம்பவத்தில் அவரின் நண்பர்களுக்குத் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

சுஜியின் பெற்றோர், போலீஸாரிடம் `எங்களுக்கும் அவனுக்கும் இனிமேல் எந்தவித சம்பந்தமும் இல்லை' என்று கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, சுஜியின் லேப்டாப்பைத் தேடி அவரின் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது கோழிப்பண்ணையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த லேப்டாப்பை போலீஸார் பறிமுதல் செய்தனர். அந்த லேப்டாப், மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதை போலீஸார் கண்டறிந்துள்ளனர். அதனால், சைபர் கிரைம் போலீஸாரின் உதவியுடன் சுஜியின் லேப்டாப்பை ஓப்பன் செய்ய முடிவு செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட காசி என்ற சுஜி
கைது செய்யப்பட்ட காசி என்ற சுஜி

சுஜியின் லேப்டாப்பில் உள்ள ரகசியம் வெளியானால் நிச்சயம் இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே போலீஸாரிடம் சிக்கிய சுஜியின் செல்போனில் உள்ள தகவல் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். லேப்டாப் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்படும் என்கின்றனர் விசாரணை அதிகாரிகள். சுஜியால் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள். அவர்களில் சிலர் மறைமுகமாக சுஜி மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

சுஜியால் பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலர், நம்மிடம் சில தகவல்களைத் தெரிவித்தனர். ``சுஜி டேமோ, காசி டேமோ என 10-க்கும் மேற்பட்ட ஐடிகளில், சமூக வலைதளங்களில் அவர் கணக்கு வைத்துள்ளார். அதில், தன்னுடைய சமூக சேவை தொடர்பான புகைப்படங்கள், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களைப் பதிவு செய்வார். அதற்கு பதிலளிக்கும் பெண்களுக்கு சுஜியிடமிருந்து கமென்ட்ஸ்கள் வரும். பின்னர், செல்போன் நம்பரைப் பகிர்ந்துகொள்ளும் சுஜி, ஜென்டில்மேனாக நடந்துகொள்வார்.

சுஜி டேமோ, காசி டேமோ என 10-க்கும் மேற்பட்ட ஐடிகளில், சமூக வலைதளங்களில் அவர் கணக்கு வைத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி

கழுத்தில் செயின், சினிமா ஹீரோ போல காஸ்ட்டியூம் என எப்போதும் பந்தாவாகவே சுஜியின் ஃலைப் ஸ்டைல் இருக்கும். அதைப் பார்த்தும் அவரின் சமூக வலைதள ஸ்டேட்டஸ்களைப் பார்த்தும் பெண்கள் எளிதில் ஏமாந்துவிடுவார்கள். சுஜியை நம்பி வீடியோ காலில் பேசும் பெண்களிடம் அவர், இரட்டை அர்த்தத்தில் சினிமா காமெடிகளைக் கூறுவார். அப்போது இன்றைய யூத்களைவிட வித்தியாசமாகவும் அவரின் செயல்பாடுகள் இருக்கும். சுஜிக்கு 17 வயது முதல் 40 வயதுக்குள் இருக்கும் பெண்களைத்தான் ரொம்ப பிடிக்கும். அவர்களிடம் மனம்விட்டுப் பேசுவார். அந்த நேரத்தில் சுஜியின் வலையில் விழும் பெண்களின் தனிப்பட்ட வீடியோக்களை தன்னுடைய ஐ போனில் சேமித்து வைத்துக்கொள்வார். இது, சம்பந்தப்பட்ட பெண்களுக்குத் தெரியாது.

`இன்ஸ்டா’ பாலியல் மோசடி; சிக்கிய லேப்டாப்! - ஃபேஸ்புக் மூலம் வேகமெடுக்கும் இன்ஜினீயர் சுஜி வழக்கு

மேலும், ஒவ்வொருவரிடமும் அவர்களின் மனநிலை, குடும்ப சூழலுக்கு ஏற்ப சுஜி பேசுவார். அக்கறையாகவும் அன்பாகவும் நடந்துகொள்ளும் சுஜி மீது பிரியம் ஏற்படும் வரை அவர் காத்திருப்பார். வித்தியாசமான விதத்தில் காதலைக் கூறுவார். அதற்கு ஓகே என்று சொல்லும் பெண்களை அடிக்கடி சந்திப்பார். அப்போதுகூட ஜென்டில்மேனாகத்தான் அவர் நடந்துகொள்வார். பின்னர், தன்னுடைய உறவினருக்கு மருத்துவ உதவி, அவசர தேவை எனக்கூறி ஆயிரக்கணக்கில் பணத்தை வாங்குவார்.

சுஜி
சுஜி

அதைப்போல அவரும் காதலிக்கும் பெண்களைப் பல இடங்களுக்கு அழைத்துச் செல்வார். அங்கு ரகசிய கேமராக்கள் மூலம் வீடியோக்களை எடுத்துக்கொள்வார். இதன் பிறகுதான் சுஜியின் சுயரூபம் வெளியில் தெரியவரும். பழகும் காலத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள், தனிமையில் சந்தித்தபோது ரகசியமாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் ஆகியவற்றை காதலித்த பெண்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி அதிர்ச்சி கொடுப்பார்.

வீடியோக்கள், புகைப்படங்களை பிரைவேட் என்று சமூக வலைதளங்களில் பதிவு செய்து மிரட்டுவார். பணம் கொடுக்கவில்லை என்றால் அதை பப்ளிக்காகப் பதிவு செய்துவிடுவார். சுஜியின் மிரட்டலை தைரியமாக எதிர்கொண்ட சில பெண்களின் தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் இன்றும் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது. அதை சமூகவலைதளங்களிலிருந்து நீக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கின்றனர் கண்ணீருடன்.

அடுத்த கட்டுரைக்கு