Published:Updated:

தமிழகத்தில் 'ஃபேமிலி ட்ரிப்' உத்தியில் கைமாறும் போதைப்பொருள்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

பொருள் அடுத்தடுத்து கைமாறி போய்கிட்டே இருக்கும். எங்க, யாருக்கு போகுதுனு அவங்களுக்குத் தெரியாது. ஏஜென்ட் போலீஸ்ல மாட்டிக்கிட்டாலும், ஒரு விவரமும் வெளியே வராது

போதை பொருள்
போதை பொருள்

சென்னையில் ஒரு நாளைக்கு கஞ்சாவில் மட்டுமே 11.25 கோடி ரூபாய் புழங்குகிறது என்கின்றன அண்டர்கிரவுண்ட் தகவல்கள். கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 96.25 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என்கிறது சென்னை காவல்துறை அறிக்கை. ஆனால், இது கண்துடைப்பு 'கணக்கு' மட்டுமே. புழக்கத்திலிருப்பது இதைவிட நூறு மடங்கு என்கிறார்கள். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/31ZLcGn

முன்னாள் கஞ்சா வியாபாரி ஒருவரிடம் பேசினோம். "முன்னெல்லாம் மதுரையில இருந்து தனியார் பஸ், காய்கறி லோடுலதான் கஞ்சா வரும். கம்பம், போடி ஏரியாக்கள்ல பயிரிடுற கஞ்சாவை வெயில்ல காயவைச்சு, அனுப்புவாங்க. இப்ப ரயில்மூலமா கஞ்சா சென்னைக்குள்ள வருது. ஒடிசா, ஆந்திராவின் விசாகப்பட்டினத்துல இருந்துதான் இங்கே சப்ளை அதிகம். இதுக்குன்னே சென்னையில இருந்து ஏஜென்ட்டுங்க குடும்பத்தோடு ரயில்ல ஒடிசா, ஆந்திராவுக்குப் போயிடுவாங்க.

சென்னையில் ஒரு நாளைக்கு கஞ்சாவில் மட்டுமே 11.25 கோடி ரூபாய் புழங்குகிறது என்கின்றன அண்டர்கிரவுண்ட் தகவல்கள்.

சந்தேகம் வரக்கூடாதுன்னுதான் 'குடும்ப ட்ரிப்' ஏற்பாடு. அந்த ஊர்ல இருக்கிற ஏஜென்ட்கிட்ட 25 கிலோ கஞ்சா மூட்டையை வாங்கி, தனித்தனியா பிரிச்சு பையில போட்டுக்கிட்டு, அடுத்த ரயில்லயே சென்னைக்குக் கிளம்பிடுவாங்க. ஒரு ஏஜென்ட் ஒடிசாவுல போய் இறங்கினவுடனே, சென்னையில இருந்து இன்னொரு ஏஜென்ட் குடும்பத்தோடு ரயில் ஏறிடுவாரு. இதுமாதிரி குடும்பத்தோடு தொழில் செய்றதுக்கு 70 ஏஜென்ட்டுங்க இருக்காங்க.

பெரம்பூர், எழும்பூர், சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல ஏஜென்ட் இறங்கினவுடனே, கஞ்சா பொட்டலத்தை வாங்கிக்க பார்ட்டிங்க தயாரா இருப்பாங்க. கைமாத்துறது மட்டும்தான் ஏஜென்ட் வேலை. பொருள் அடுத்தடுத்து கைமாறி போய்கிட்டே இருக்கும். எங்க, யாருக்கு போகுதுனு அவங்களுக்குத் தெரியாது. ஏஜென்ட் போலீஸ்ல மாட்டிக்கிட்டாலும், ஒரு விவரமும் வெளியே வராது" என்றவர், தொழிலின் பிற சூட்சுமங்களையும் விவரித்தார்.

10 கிராம் பொட்டலம் 50 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரை ஏரியா, ஆள்களுக்குத் தகுந்த மாதிரி விற்கப்படுது. ஒரு நாளைக்கு சென்னைக்குள்ள 750 கிலோவுக்குக் குறையாம கஞ்சா விற்பனையாகுது. ஒரு நாளைக்கு 11.25 கோடி இதுல புழங்குது. மாசம் சுமார் 350 கோடி ரூபாய் புழங்குற தொழில் இது. போலீஸுக்கு மாமூல் கன் மாதிரி போயிடுது. தவிர, மாசத்துக்கு இத்தனை கேஸ் கஞ்சா வியாபாரிங்க கொடுக்கணும்னும் கணக்கு இருக்கு. அதனால அவங்க கண்டுக்க மாட்டாங்க'' என்று விலாவாரியாக விவரித்தார்.

போதை பொருள்
போதை பொருள்

"ஒரு கைதியின் விடுதலைக்காக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராமசாமி முன்னிலையில் வாதிட்டேன். சிறைக்குள் கஞ்சா விற்றதாக அந்தக் கைதிமீது அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அப்போது, 'சிறைக்குள் என்ன கஞ்சா வயலா இருக்கிறது... உங்க அதிகாரிகள்தானே கொண்டுபோய்க் கொடுத்திருப்பார்கள். அவர்களை ஏன் கைது செய்யவில்லை?' என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். கஞ்சா கடத்துவதற்கான மிகச்சிறந்த வாய்ப்புகள் சென்னை போலீஸுக்குத்தான் இருக்கின்றனவே தவிர, மாவோயிஸ்டுகளுக்கு இல்லை" என்கிறார் தோழர் தியாகு.

- பொட்டலம் ஸ்பெஷலிஸ்ட் | மாவோயிஸ்ட் தொடர்பா? | சென்னை சப்ளை மேப் | குற்றச்செயல் பின்னணியில் கஞ்சா | தேனி... நம்பர் 1 கஞ்சா | கோவை 'கொண்டி' | தட்டிக்கேட்டால் கொலை | பக்தர்கள் வேடத்தில் கடத்தல் | "போலீஸார்தான் போதை வியாபாரிகள்!'' - இப்படிப் பல்வேறு பகீர் தகவல்களை உள்ளடக்கிய ஜூனியர் விகடன் கவர் ஸ்டோரியை முழுமையாக வாசிக்க > போதை நகரம்! - தள்ளாடும் தமிழ்நாடு... - ஒரு பகீர் ரிப்போர்ட் https://www.vikatan.com/news/general-news/report-and-info-graphics-about-drugs

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv |