Published:Updated:

நீட் தேர்வு: `வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் பட பாணியில் மோசடி' - நடந்தது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஜெய்ப்பூரில் நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள்
ஜெய்ப்பூரில் நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள்

சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார் எழுந்த நிலையில் மகாராஷ்டிராவில் நடைபெற்ற நீட் தேர்வில் பெரும் மோசடி நடந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு சமீபத்தில் நடந்து முடிந்திருந்தது. நடந்து முடிந்த நீட் தேர்வில் சில இடங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நீட் வினாத்தாளைப் போட்டோ எடுத்து வெளியே அனுப்ப வெளியே இருக்கும் நபர்கள் அந்த கேள்விகளுக்குப் பதில் அனுப்ப அதை வைத்துத் தேர்வு எழுதியுள்ளார்.

நீட் தேர்வு மையம்
நீட் தேர்வு மையம்

இந்த குற்றத்திற்குத் தேர்வு கண்காணிப்பாளர் ஒருவரே துணையாக இருந்துள்ளார். இதற்காக 30 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டுள்ளது. இந்த குற்றத்தில் மாணவி உட்பட எட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை விரிவுபடுத்தினர். கைது செய்தவர்களின் இடத்தில் சந்தேகத்திற்குரிய விதத்திலிருந்த என்-95 முகக்கவசங்களை கைப்பற்றி சோதனை செய்ததில், முகக்கவசங்களுக்குள் தகவல் தொடர்பு சாதனங்களை மறைத்து வைத்திருந்தனர். இந்த சாதனங்களின் மூலம், வெளியே உள்ள நபர்களைத் தொடர்பு கொண்டு தேர்வு எழுதியதையும். மாற்று நபர்களை வைத்துத் தேர்வு எழுதியதையும் கைதானவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக 20-க்கும் அதிகமான நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜெய்ப்பூரில் நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள்
ஜெய்ப்பூரில் நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள்

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தில், கிரேஸி மோகனின் தலையின் விக்கை மாட்டி தனக்குப் பதிலாக மெடிக்கல் காலேஜ் நுழைவுத் தேர்வு எழுத வைப்பார் கமல்ஹாசன். அவரும் தேர்வு எழுதி கமல் முதல் மாணவராகத் தேர்ச்சி அடைவார். அடுத்து நடைபெறும் தேர்வுகளில் கமல் காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு வெளியில் இருக்கும் கிரேஸி மோகனிடம் பதிலைக் கேட்டு பரீட்சை எழுதி முடிப்பார். இந்த திரைப்பட காட்சிகளையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு நீட் தேர்வுகளில் முறைகேடுகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜெய்ப்பூரில் விசாரணை ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும் வேளையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள நீட் பயிற்சி மையம் நடந்து முடிந்த நீட் தேர்வில் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. அந்த பயிற்சி மையத்தில் படித்த மாணவர்களின் சான்றிதழ்களை வைத்துப் போலியான சான்றிதழ்களைத் தயாரித்து, மாணவர்களுக்குப் பதிலாக வேறு நபர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதற்காக மாணவர்களின் பெற்றோர்களிடம் 50 லட்சம் ரூபாய் வரை பணம் பெறப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களுக்கும் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் தரப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த முறைகேட்டில் பலர் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணையை விரைவுபடுத்தியுள்ளார்.

நீட் தேர்வு: சட்ட மசோதா தாக்கல் செய்த ஸ்டாலின்;`உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறலாமா'-எடப்பாடி பழனிசாமி
நீட் தேர்வு முடிவுகள்
நீட் தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் கடந்த வருடம் தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் உதித் சூர்யா என்ற மாணவன் நீட் தேர்வை ஆள்மாறாட்டம் செய்து எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் மாணவர் மற்றும் அவரின் பெற்றோர் கைது செய்யப்பட்டனர். இந்த மாணவனுக்குக் கேரளாவில் உள்ள ஒரு நீட் பயிற்சி மையம் மூலமாக தனக்குப் பதிலாக வேறொருவர் தேர்வு எழுதியதும், மேலும் பலர் உதவியதும் தெரியவந்தது. மேலும் பல மாணவர்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது. மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர், இடைத்தரகர்கள் கைதான நிலையில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட இடைத்தரகர் ரசீத் என்பவரையும் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்கள் பலரையும் இன்றுவரை காவல்துறை கைது செய்யமுடியவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு