Published:Updated:

திண்டுக்கல்: ரூ.12 கோடி மதிப்பிலான 5 வெண்கலச் சிலைகள் கடத்தல் - மீட்கப்பட்டது எப்படி?

வெண்கலச் சிலைகள்

பிரபாகரன், குமார், ஈஸ்வரன் ஆகியோர் கோயிலில் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி கோயில் செயலர் சண்முகசுந்தரம், பூசாரிகள் ஆகியோரை அங்குள்ள தனி அறையில் அடைத்துள்ளனர். பிறகு கோயிலில் இருந்த 5 சிலைகளையும் கடத்திச் சென்றுள்ளனர்.

திண்டுக்கல்: ரூ.12 கோடி மதிப்பிலான 5 வெண்கலச் சிலைகள் கடத்தல் - மீட்கப்பட்டது எப்படி?

பிரபாகரன், குமார், ஈஸ்வரன் ஆகியோர் கோயிலில் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி கோயில் செயலர் சண்முகசுந்தரம், பூசாரிகள் ஆகியோரை அங்குள்ள தனி அறையில் அடைத்துள்ளனர். பிறகு கோயிலில் இருந்த 5 சிலைகளையும் கடத்திச் சென்றுள்ளனர்.

Published:Updated:
வெண்கலச் சிலைகள்

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரைக்கு அருகே தென்னம்பட்டி மலையின்மேல், சங்க காலத்தில் கட்டப்பட்ட ஆதிநாதப் பெருமாள் - ரங்கநாயகி அம்மாள் கோயில் அமைந்திருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்த பழைமைவாய்ந்த கோயிலுக்கு தினம்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

சிலை
சிலை

கடந்த 2007-ல் பக்தர்கள் சார்பில் புதிய சிலைகள் நிறுவ முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. பக்தர்கள் அளித்த நன்கொடை மூலம் சுவாமிமலையிலுள்ள புகழ்பெற்ற சிற்பியிடம் ஐந்து வெண்கலச் சிலைகள் செய்யப்பட்டு கோயிலில் நிறுவப்பட்டிருந்தன.

சிலை
சிலை

இந்நிலையில் கோயிலில் புதிதாக நிறுவப்பட்டிருந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சந்திரசேகரர், பார்வதி ஆகிய ஐந்து வெண்கலச் சிலைகளும் கடந்த ஆண்டு, மே மாதம் கடத்தப்பட்டன. ஆனால் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் போலீஸாரிடம் புகார் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில் திண்டுக்கலில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான வெண்கலச் சிலைகளை விற்க சில புரோக்கர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதாக தென்மண்டல சிலைக் கடத்தல் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.

வெண்கலச் சிலை
வெண்கலச் சிலை

அதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், திண்டுக்கல் முள்ளிப்பாடியைச் சேர்ந்த பிரபாகரன், டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த குமார், சீலப்பாடியைச் சேர்ந்த ஈஸ்வரன் ஆகியோர் கோயிலில் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி கோயில் செயலர் சண்முகசுந்தரம், பூசாரிகள் பாண்டியன், ராஜ்குமார் ஆகியோரை அங்குள்ள தனி அறையில் அடைத்துள்ளனர். பிறகு கோயிலில் இருந்த ஐந்து சிலைகளையும் கடத்திச் சென்றுள்ளனர் என்பது தெரிந்தது.

இதையடுத்து சில நாள்களில் திண்டுக்கல்லைச் சேர்ந்த பால்ராஜ், தினேஷ், இளவரசன் ஆகியோரிடம் சிலைகள் ஒப்படைக்கப்பட்டு 12 கோடி ரூபாய்க்கு விற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து புரோக்கர்கள் பால்ராஜ், தினேஷ் ஆகியோரை எஸ்.ஐ ராஜேஷ் சிலை வாங்குபவர்போல அணுகியிருக்கிறார்.

கடத்தப்பட்ட வெண்கலச் சிலை
கடத்தப்பட்ட வெண்கலச் சிலை

ஆனால் அவரைச் சந்தேகப்பட்ட புரோக்கர்கள் சிலைகளைக் காட்ட மறுத்துவிட்டனர். பிறகு இரண்டு வாரங்களாக அவர்களிடம் பேசி நம்பவைத்து, ஆகஸ்ட் 16-ம் தேதி சிலைகளைக் காட்டவைத்துள்ளனர். அப்போது சிலைகளைக் காட்டிய ஈஸ்வரன், சேகர் ஆகியோரைக் கைதுசெய்து, அவர்களிடம் இருந்த சிலைகளை போலீஸார் மீட்டுள்ளனர். தப்பியவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.