Published:Updated:

காரில் சென்றவரிடம் ஹெல்மெட் அணியவில்லை என அடாவடி 'வசூல்'- இன்ஸ்பெக்டருக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம்

இன்ஸ்பெக்டருக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம்

காரில் சென்றவரிடம் ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி ரூ.2,000 அபராதம் வசூலித்த இன்ஸ்பெக்டருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டிருக்கிறது.

காரில் சென்றவரிடம் ஹெல்மெட் அணியவில்லை என அடாவடி 'வசூல்'- இன்ஸ்பெக்டருக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம்

காரில் சென்றவரிடம் ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி ரூ.2,000 அபராதம் வசூலித்த இன்ஸ்பெக்டருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டிருக்கிறது.

Published:Updated:
இன்ஸ்பெக்டருக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சிவன்ராஜ். இவர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேவுள்ள வெள்ளையாபுரத்துக்கு துக்க நிகழ்வுக்காக தன்னுடைய சீனியர் வழக்கறிஞர், நண்பர்கள் நான்கு பேருடன் காரில் வந்திருக்கிறார்.

ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை அருகே அதிகாலை வந்து கொண்டிருந்தபோது, கேணிக்கரை காவல் நிலையத்தில் (அப்போது) ஆய்வாளராகப் பணியாற்றிய சிலைமணி, வழக்கறிஞர் சிவன்ராஜ் காரை வழிமறித்து ஆவணங்களை பரிசோதித்திருக்கிறார். அதில் அனைத்தும் சரியாக இருந்த நிலையிலும், காரில் வந்த சிவன்ராஜுக்கு ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி ரூ.2 ஆயிரம் அபராதம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

அபராதம் விதிக்கப்பட்ட ஆய்வாளர் சிலைமணி
அபராதம் விதிக்கப்பட்ட ஆய்வாளர் சிலைமணி

அவசரமாகச் செல்வதால் வேறு வழியில்லை என அவரிடம் இரண்டாயிரம் ரூபாயை அபராதமாக கொடுத்து அதற்கு ரசீது கேட்டிருக்கிறார். ஆனால், ரூ.100-க்கு ரசீது போட்டு கொடுத்திருக்கிறார். இது குறித்து கேள்வி எழுப்பிய சிவன்ராஜையும், அவருடன் வந்தவர்களையும் தகாதவார்த்தைகளால் திட்டியிருக்கிறார்.

கேணிக்கரை காவல் நிலையம்
கேணிக்கரை காவல் நிலையம்

இது குறித்து சிவன்ராஜ் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்தார். நீதிபதி சித்தரஞ்சன் விசாரித்ததில், ராமநாதபுரம் கேணிக்கரை ஆய்வாளராகப் பணியாற்றிய சிலைமணி மனித உரிமை மீறலில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து ஆய்வாளர் சிலைமணி, நான்கு வாரக்காலத்துக்குள் வழக்கறிஞர் சிவன்ராஜூக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் வழங்க வேண்டும் என்றும், விதிமீறலில் ஈடுபட்ட ஆய்வாளர் சிலைமணி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் உள்துறைச் செயலாளருக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டிருக்கிறார்.

தற்போது சிலைமணி தேனி மாவட்டம், உத்தமபாளையம் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.