Published:Updated:

பழநி: `வீட்டு வாசலில் மண்டை ஓடுகள்; போதை இளைஞர்களின் வேலையா?’ - அச்சத்தில் மக்கள்

கடை முன் வைக்கப்பட்டுள்ள மனித மண்டை ஓடு
கடை முன் வைக்கப்பட்டுள்ள மனித மண்டை ஓடு

வீடுகள், கடை முன்பு மனித மண்டை ஓடுகளும் எலும்புகளும் வைக்கப்பட்டது, பழநி வாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி நகரில் உள்ளது தேவாங்கர் தெரு. பழனி நகராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டாக இருக்கும் இப்பகுதி இன்று காலை பரபரப்பாகப் காணப்பட்டது. மனித மண்டை ஓடு உட்பட, மனித எலும்புகள், நான்கு வீடுகள், ஒரு கடை வாசலில் வைக்கப்பட்டிருந்தது. மண்டை ஓட்டில் குங்குமப் பொட்டு வைத்து, அதனைச் சுற்றி கரும்பு மற்றும் சிவப்பு நிற பொடிகள் தூவப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடந்த தெரு வாசிகள், போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

கடை முன் வைக்கப்பட்டுள்ள மனித மண்டை ஓடு
கடை முன் வைக்கப்பட்டுள்ள மனித மண்டை ஓடு
பழநி - சுவிட்சர்லாந்து செல்வத் திருவிழா

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழநி நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தேவாங்கர் தெருவில் வசிக்கும் மணிகண்டன், சரவணன், பாக்கியம் ஆகியோரின் வீடுகளின் வாசல் மற்றும் கடையின் வாசலில் மட்டுமே எலும்புகள் வைக்கப்பட்டிருந்தது. இது ஏதேனும் முன் பகை காரணமாக வைக்கப்பட்டதா, அல்லது தெரு வாசிகளை அச்சமடையச் செய்ய வைக்கப்பட்டதா என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆராய திட்டமிட்டுள்ளனர்.

பழநி மலை
பழநி மலை
`முகமூடி, கத்தியுடன் வந்த 10 பேர்.. தாக்கப்பட்ட நாய்’ -`தீரன்' பட பாணியில் நடந்த பழநி நகைக் கொள்ளை

இது ஒருபுறம் என்றால், அப்பகுதி இளைஞர்கள், அடிக்கடி மது மற்றும் கஞ்சா போதையில், சிலரிடம் தொடர் பிரச்னை செய்துவந்ததாகவும், இதனை தெரு வாசிகள் கண்டித்ததால், அவர்கள் இச்செயலில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆன்மீக நகரான பழநியின் முக்கிய தெருவில் மனித எலும்புக் கூடுகளை வைத்தது பழனி வாசிகளை அச்சமடையச் செய்துள்ளது. இது போன்ற செயலில் ஈடுபடுபவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு