Published:Updated:

‘தூக்கிட்டு இறந்த மனைவி; அதிர்ச்சியில் கணவரும் தற்கொலை!’ -சேலம் புதுமணத் தம்பதியருக்கு நேர்ந்த சோகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தற்கொலை செய்துகொண்ட கார்த்திக் - பிரியா
தற்கொலை செய்துகொண்ட கார்த்திக் - பிரியா

கார்த்திக் தற்கொலை செய்துகொண்டது சம்பந்தமாக அவருடைய வீட்டுக்கு விசாரிக்கச் சென்ற போலீஸுக்கு மற்றுமோர் அதிர்ச்சி காத்திருந்தது.

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகேயுள்ள வைகுந்தம் மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (33). சொந்தமாக டிப்பர் லாரி வைத்து ஓட்டிவந்திருக்கிறார். இவரின் மனைவி பிரியா (27). ஒன்றரை வருடத்துக்கு முன்புதான் இவர்களுக்குத் திருமணம் நடந்தது. கார்த்திக்குக்குக் குடிப்பழக்கம் இருந்திருக்கிறது. இது அவருடைய மனைவி பிரியாவுக்குப் பிடிக்கவில்லை. குடிப்பழக்கத்தை விடச் சொல்லி பலமுறை கணவர் கார்த்திக்கை கண்டித்திருக்கிறார். இருந்தபோதிலும் கார்த்திக் குடிப்பழக்கத்தை கைவிட்டபாடில்லை. இதனால், தினமும் கார்த்திக் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போதெல்லாம் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்றிரவு கார்த்திக் வழக்கம்போல் குடிபோதையில் வீட்டுக்குவர, பிரியா கண்டிக்கவே இருவருக்கும் இடையே பெரும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இன்று காலை எழுந்த கார்த்திக் வெளியே சென்றுவிட்டு சிறிது நேரத்தில் வீடு திரும்பியபோது, வீட்டின் படுக்கை அறையில் பிரியா தூக்கிட்டு இறந்துகிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மனைவி தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திக், அருகிலிருந்த மாரியம்மன் கோயில் பகுதிக்குச் சென்று பாட்டிலால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அதன் பின்னர் அங்குள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இதைப் பார்த்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சங்ககிரி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் விசாரணைக்காக அவரின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அவருடைய மனைவி பிரியாவும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது போலீஸாருக்கு தெரியவந்திருக்கிறது. அதையடுத்து பிரியாவின் உடலையும் போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

நாமக்கல்: கடன் பிரச்னை; அதிமுக ஒன்றிய செயலாளர் தற்கொலை! - சந்தேகம் கிளப்பும் கட்சியினர்

இது குறித்து விஷயமறிந்த போலீஸாரிடம் பேசினோம். ``சம்பவத்தன்று காலையில் கார்த்திக் அவருடைய மச்சானுக்கு போன் செய்து தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும், உங்களுடைய தங்கையை வந்து அழைத்துச் செல்லுங்கள் என்றும் சொல்லியிருக்கிறார். அதையடுத்து பிரியாவின் சகோதரர் பிரியாவுக்கு போன் செய்து அறிவுரை கூறியிருக்கிறார். அதன் பிறகு தான்கணவன், மனைவி இருவருக்கும் வாக்குவாதம் அதிகமாகியிருக்கிறது. அந்தக் கோபத்தில் பிரியா தூக்கில் தொங்க, போலீஸ் விசாரணைக்கு பயந்து கார்த்திக்கும் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்திருக்கிறார். மற்றபடி இருவருக்கும் இடையே வேறு எந்தப் பிரச்னையும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆத்திரத்தில் எடுத்த முடிவில் இரண்டு உயிர்கள் பலியாகிவிட்டன. இருந்தபோதிலும் இருவருடைய தற்கொலை சம்பந்தமாகவும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறோம்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு