Published:Updated:

பட்டப்பகலில் வங்கிக்குள் வைத்து மனைவியை வெட்டிய கணவன் - தேனியில் அதிர்ச்சி சம்பவம்

அரிவாள் வெட்டு - கொலைவெறித் தாக்குதல்

பிரேமலதாவின் நடத்தையில் சந்தேகம் இருந்தால் தம்பதியர் இருவரும் கடந்த ஓராண்டாகப் பிரிந்து வாழ்ந்துவருகின்றனர். பிரிவுக்கு முன்பு பிரேமலதா பெயரில் வாங்கிய சொத்துகளை, தனது பெயருக்கு மாற்றித் தரக் கோரி வெள்ளைச்சாமி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.‌

பட்டப்பகலில் வங்கிக்குள் வைத்து மனைவியை வெட்டிய கணவன் - தேனியில் அதிர்ச்சி சம்பவம்

பிரேமலதாவின் நடத்தையில் சந்தேகம் இருந்தால் தம்பதியர் இருவரும் கடந்த ஓராண்டாகப் பிரிந்து வாழ்ந்துவருகின்றனர். பிரிவுக்கு முன்பு பிரேமலதா பெயரில் வாங்கிய சொத்துகளை, தனது பெயருக்கு மாற்றித் தரக் கோரி வெள்ளைச்சாமி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.‌

Published:Updated:
அரிவாள் வெட்டு - கொலைவெறித் தாக்குதல்

தேனி மாவட்டம், தேவாரம் அருகேயுள்ள டி.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (42). கூலித் தொழிலாளியான இவருக்கு பிரேமலதா என்ற பெண்ணுடன் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்தத் தம்பதிக்கு ஒரு பெண், ஆண் என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் டி.மேட்டுப்பட்டியில் உள்ள கனரா வங்கிக்கு வந்த பிரேமலதாவைப் பின்தொடர்ந்து வந்த கணவர் வெள்ளைச்சாமி, வங்கிக்குள் வைத்து அவரை அரிவாளால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். அதில் நிலை குலைந்து விழுந்த பிரேமலதாவை உடன் வந்த உறவினரான ஜெகதீசன் (21) என்பவரும், தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். பின் இருவரும் அங்கிருந்து சென்று தலைமறைவாகிவிட்டனர்.

அரிவாள் வெட்டு
அரிவாள் வெட்டு

இது குறித்து வங்கி ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், பிரேமலதாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அருகே உள்ள உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சையும், தொடர்ந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டுவருகிறது.‌

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த தேவாரம் காவல்துறையினர் பெண் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய இருவரையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.‌ இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிரேமலதாவின் நடத்தையில் சந்தேகம் இருந்தால் தம்பதியர் இருவரும் கடந்த ஓராண்டாகப் பிரிந்து வாழ்ந்துவருகின்றனர். இதற்கிடையே கருத்து வேறுபாட்டுக்கு முன்பு பிரேமலதா பெயரில் வாங்கிய சொத்துகளை, பிரிவுக்குப் பிறகு தனது பெயருக்கு மாற்றம் செய்து தரக்கோரி வெள்ளைச்சாமி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.‌

கொலைவெறித் தாக்குதல் காட்சி
கொலைவெறித் தாக்குதல் காட்சி

இதை பிரேமலதா ஏற்க மறுத்ததால் உண்டான ஆத்திரத்தில் இந்தக் கொலைவெறித் தாக்குதல் நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. ``தலைமறைவாக இருந்த வெள்ளைச்சாமியை கைதுசெய்துள்ளோம். இதில் தொடர்புடைய பிறரைத் தேடிவருகிறோம். வெள்ளைச்சாமியிடம் விசாரித்துவருகிறோம் அவர் அளிக்கும் வாக்குமூலத்தில்தான் கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவரும்’’ என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பட்டப்பகலில் வங்கிக்குள் இருந்த பெண் மீது கொலைவெறித் தாக்குதல் நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism