Published:Updated:

மனைவியின் நடத்தையில் சந்தேகம்! - தலையணையால் அமுக்கிக் கொன்ற கணவன் கைது

ஜி.சதாசிவம்
எஸ்.தேவராஜன்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே, மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரைத் தலையணையால் அமுக்கி கொலை செய்த கணவர் கைதுசெய்யப்பட்டார்.

சுரேஷின் வீடு
சுரேஷின் வீடு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மாளிகைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர், முத்துசாமி மகன் சுரேஷ்(25). இவர், விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி அமலா. இவர்களுக்கு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து, 5 மாத ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே வரதட்சணை கேட்டு அடிக்கடி தகராறு வரும் என்கிறார்கள். மேலும், பிறந்த குழந்தை சிவப்பாக இருப்பதால் சுரேஷ், தனது மனைவி அமலாவின் நடத்தையில் சந்தேகப்பட்டும் சுரேஷ் தகராறு செய்துவந்துள்ளார்.

கைது
கைது
Representational Image

இந்நிலையில், நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தபோது, கணவன்-மனைவிக்குள் வழக்கம்போல் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதில் ஆத்திரமடைந்த சுரேஷ், அமலாவை தலையணையால் அமுக்கி கொலைசெய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

Vikatan

இன்று காலை வெகுநேரமாகியும் அமலா வீட்டை விட்டு வெளியில் வராததால் சந்தேகமடைந்த அண்டைவீட்டினர் வந்து பார்த்தபோது, அவர் இறந்தது தெரியவந்தது.

அமலா
அமலா

இதுகுறித்து தகவலறிந்த காட்டுமன்னார்கோயில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து, அமலாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில், போலீஸார் தன்னைத் தேடுவதை அறிந்த சுரேஷ், காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். மனைவிமீது சந்தேகப்பட்டு கணவனே கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.