Published:Updated:

சந்தேகத்தால் ஏற்பட்ட தகராறு; கன்னத்தில் அறைந்ததில் மனைவி பலி! - காதல் கணவர் கைது

சடலம்
சடலம்

சந்தேகத்தால் ஏற்பட்ட தகராறில் மனைவியின் கன்னத்தில் கணவர் அறைந்திருக்கிறார். அதோடு மனைவியின் தலையை சுவற்றில் மோதியிருக்கிறார். இதில் மூளைக்குச் செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டு மனைவி உயிரிழக்க, கணவரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை அம்பத்தூரை அடுத்த சூரப்பட்டு ஜேபி நகரைச் சேர்ந்தவர் முத்து. இவரின் மனைவி விஜயலட்சுமி (37). இவர்கள் இருவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். அந்தப்பகுதியில் முத்து, பேக்கிரி கடை வைத்திருக்கிறார். அவரின் கடையின் அருகே கடை வைத்திருக்கும் பெண்கள் சிலரிடம் முத்து சகஜமாக பேசி வந்திருக்கிறார். அதை விஜயலட்சுமி கண்டித்திருக்கிறார்.

திருமணம்
திருமணம்

அதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 14.8.2021-ம் தேதி இரவு 9.30 மணியளவில் முத்துவுக்கும் விஜயலட்சுமிக்கு இடையே சந்தேகம் காரணமாக தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஆத்திரமடைந்த முத்து, மனைவி விஜயலட்சுமியின் கன்னத்தில் மாறி, மாறி அடித்திருக்கிறார். அதோடு தலையைப் பிடித்து வீட்டின் சுவற்றில் மோதியிருக்கிறார். அப்போது விஜயலட்சுமியை முத்து அநாகரீகமாக பேசியிருக்கிறார். முத்து தாக்கியதில் விஜயலட்சுமிக்கு இடது கன்னத்திலும் தலையிலும் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது.

அதனால் தன்னுடைய சகோதரி சித்ராவுக்கு போன் செய்த விஜயலட்சுமி, வீட்டில் நடந்த சம்பவத்தை கூறியதோடு கணவர் தாக்கியதில் ஏற்பட்ட காயங்களால் தலை சுற்றுவதாகவும் வாந்தி வருவதாகவும் கூறி அழுதிருக்கிறார். அப்போது விஜயலட்சுமிக்கு சித்ரா ஆறுதல் கூறியதோடு 15-ம் தேதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்திருக்கிறார். மறுநாள், (15-ம் தேதி) படுக்கையறையில் விஜயலட்சுமி மயங்கி கிடந்தார். அதுகுறித்து அவரின் மகன், பெரியம்மா சித்ராவுக்கு போன் செய்து விவரத்தைத் தெரிவித்தார். இதையடுத்து விஜயலட்சுமியை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உறவினர்களும் கணவர் முத்துவும் சேர்த்தனர்.

காஞ்சிபுரம்: கணவன் கொலை; நாடகமாடிய மனைவி; 13 நாள்களுக்குப்பின் வெளிவந்த உண்மை!
முதல் தகவல் அறிக்கை
முதல் தகவல் அறிக்கை

அப்போது விஜயலட்சுமிக்கு ஸ்கேன் எடுத்துபார்த்தபோது மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய் சேதமடைந்திருப்பது தெரியவந்தது. அதனால் மயக்கத்திலிருந்த விஜயலட்சுமி கண்விழிக்காமல் சுயநினைவு இல்லாமல் இருந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி இன்று காலை விஜயலட்சுமி உயிரிழந்தார். அதன்பிறகு விஜயலட்சுமியை அசிங்கமாக திட்டி அடித்து சுயநினைவை இழக்க வைத்த முத்து மீது நடவடிக்கை எடுக்கும்படி அவரின் சகோதரி சித்ரா அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 294 பி, 325, 506 (1) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிந்து முத்துவைக் கைது செய்தனர்.

குடும்பத்தில் ஏற்பட்ட சந்தேகத் தீயால் அம்மா உயிரிழந்த நிலையில் அப்பாவும் சிறைக்குச் சென்றுவிட்டார். இவர்களின் மகன், மகளுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் குடும்பத்தினர் தவித்தனர்.

காஞ்சிபுரம்: கணவன் கொலை; நாடகமாடிய மனைவி; 13 நாள்களுக்குப்பின் வெளிவந்த உண்மை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு