Published:Updated:

குழந்தை வேண்டும் - மனைவியை நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக குளிக்க கட்டாயப்படுத்திய கணவன், சாமியார் கைது

சித்திரிப்புப் படம்

மகாராஷ்டிராவில் ஆண் குழந்தைவேண்டி மனைவியை அனைவர் முன்னிலையில் நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாகக் குளிக்கக் கட்டாயப்படுத்திய கணவனும் சாமியாரும் கைதுசெய்யப்பட்டனர்.

குழந்தை வேண்டும் - மனைவியை நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக குளிக்க கட்டாயப்படுத்திய கணவன், சாமியார் கைது

மகாராஷ்டிராவில் ஆண் குழந்தைவேண்டி மனைவியை அனைவர் முன்னிலையில் நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாகக் குளிக்கக் கட்டாயப்படுத்திய கணவனும் சாமியாரும் கைதுசெய்யப்பட்டனர்.

Published:Updated:
சித்திரிப்புப் படம்

ஆண் குழந்தை பெற்றுக்கொடுக்கவில்லை என்று கூறி, அடிக்கடி பெண்கள் கணவன் வீட்டில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவது வழக்கமாக நடப்பது. மகாராஷ்டிரா மாநிலத்திலும் அது போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. புனேயைச் சேர்ந்த தொழிலதிபர் ரஞ்சித் ஷிண்டே (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனக்கு ஆண் குழந்தை பெற்றுக்கொடுக்கவில்லை என்று கூறி, தன்னுடைய மனைவியை அடித்து சித்ரவதை செய்துவந்தார். ரஞ்சித்துடன் அவரின் பெற்றோரும் சேர்ந்து மருமகளைச் சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.

குழந்தை வேண்டும் - மனைவியை நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக குளிக்க கட்டாயப்படுத்திய கணவன், சாமியார் கைது

இறுதியாக ஆண் குழந்தை பெற வேண்டும் என்ற நினைப்பில் தன்னுடைய மனைவியை கோலாப்பூரிலுள்ள சாமியார் ஒருவரிடம் ரஞ்சித் அழைத்துச் சென்றார். அதன் பிறகு நடந்த சம்பவம் குறித்து அந்தப் பெண் புனே போலீஸில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது,

``ரஞ்சித்தும், அவரின் பெற்றோரும் கோலாப்பூர் அருகிலுள்ள ஜெயசிங்பூரில் இருக்கும் ஒரு சாமியாரிடம் என்னை அழைத்துச் சென்றனர். எனக்கு பில்லி சூனியம் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி சாமியார் பூஜை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து இரண்டு இடங்களில் பூஜை செய்யப்பட்டது. அதோடு ஆண் குழந்தை பெற வேண்டுமானால் நீர்வீழ்ச்சி ஒன்றில் நிர்வாணமாக நான் குளிக்க வேண்டும் என்றும், அதன் மூலம் ஆண் குழந்தை பிறக்கும் என்றும் தெரிவித்தார். இதனால் என்னை ரத்னகிரி மாவட்டத்திலுள்ள மாலேஷ்வரில் இருக்கும் நீர்வீழ்ச்சிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அனைவர் முன்னிலையிலும் என்னைக் கட்டாயப்படுத்தி நிர்வாணமாக நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சொன்னார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு 2013-ம் ஆண்டிலிருந்து வரதட்சணை கேட்டுத் தன்னைத் துன்புறுத்திவருவதாகவும், தனது கையெழுத்தை போலியாகப் பயன்படுத்தி தனது சொத்தின் பெயரில் ரூ.75 லட்சம் கடன் பெற்றுள்ளதாகவும், தனது நகைகள் அனைத்தையும் பிடுங்கிக்கொண்டதாகவும் அந்தப் பெண் தனது புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். போலீஸார் வரதட்சணை கொடுமைச் சட்டம், பில்லி சூனிய தடுப்புச் சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து அந்தப் பெண்ணின் கணவன், மாமன், மாமியார், சாமியார் ஆகியோரைக் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.