Published:Updated:

`62 வயது முதியவருடன் ஏற்பட்ட திடீர் நட்பு...' -சென்னை பெயின்டரால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

செந்தில் முருகன்
செந்தில் முருகன்

62 வயது முதியவருடன் மனைவி பழகியதைக் கண்டித்த கணவர், இருவரையும் பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார். மனைவி கொலை வழக்கில் கணவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை எம்.ஜி.ஆர் நகர் 3-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் செந்தில் முருகன் (38). இவர் பெயின்டராக வேலை பார்த்து வந்தார். இவரின் மனைவி லட்சுமி (35). இந்தத் தம்பதியக்கு 13 வயதில் மகள் உள்ளார். எம்.ஜி.ஆர் நகர் குப்பன் தெருவில் வசித்து வருபவர் கோவிந்தசாமி (62). இவர் செக்யூரிட்டியாகப் பணியாற்றி வந்தார். இவருக்கும் செந்தில் முருகனின் மனைவி லட்சுமிக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர். இவர்களின் நட்பு குறித்து கேள்விப்பட்ட செந்தில்முருகன், லட்சுமியைப் பலதடவைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இருவரும் தங்களின் பழக்கத்தைக் கைவிடவில்லை என்கிறார்கள்.

கோவிந்தசாமி
கோவிந்தசாமி

இந்தநிலையில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதகத் தெரிகிறது. அதனால் லட்சுமி, கோவிந்தசாமியின் வீட்டுக்குச் சென்றுவிட்டார். மனைவியை வீட்டுக்கு வரும்படி பல தடவை செந்தில் அழைத்தும் லட்சுமி வரவில்லை. அதனால் ஆத்திரமடைந்த செந்தில் முருகன், பெட்ரோலை வாங்கிக்கொண்டு கோவிந்தசாமியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது கதவைத் திறந்த கோவிந்தசாமி, லட்சுமி ஆகியோர் மீது செந்தில் முருகன் பெட்ரோலை ஊற்றியுள்ளார். பின்னர் செந்தில் முருகன் தீ வைத்தாகக் கூறப்படுகிறது.

அதனால் இருவரும் அலறித் துடித்தனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வந்தனர். தீயை அனைத்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக எம்.ஜி.ஆர்.நகர் போலீஸார் வழக்கு பதிந்து செந்தில் முருகனைக் கைது செய்தனர்

செந்தில் முருகன்
செந்தில் முருகன்
` பெண் கொடுத்த நகை பறிப்புப் புகார்; 6 கொலைகள்..!' -போலீஸுக்கு அதிர்ச்சிகொடுத்த வடசென்னை ரவுடிகள்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``தீக்காயமடைந்த லட்சுமி, சிகிச்சை பலனின்றி இறந்தார். அதனால் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ளோம். கோவிந்தசாமியும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். செந்தில்முருகனிடம் விசாரித்தபோது `மனைவி செய்த துரோகத்தால் கொலைகாரனாகிவிட்டேன்' என்று கூறியுள்ளார்.

விசாரணையில் கோவிந்தசாமி `என்னுடைய மகளுக்குத் திருமணமாகிவிட்டது. மனைவி, என்னைப் பிரிந்து சென்றுவிட்டாள். அதனால் தனியாக வசித்துவந்தேன். அப்போதுதான் லட்சுமியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. 20 நாள்களுக்கு முன் லட்சுமி என் வீட்டுக்கு வந்தாள். தன்னுடைய கணவன் செந்தில்முருகன் தன்னை அடித்து வீட்டைவிட்டு விரட்டிவிட்டதாகக் கூறினாள். அதனால்தான் அவளை என் வீட்டில் தங்க அனுமதித்தேன்.

`கொரோனா சிகிச்சைக்கு என்ன கட்டணம்?' - அதிர்ச்சி கொடுத்த ஐ.எம்.ஏ தமிழகப் பிரிவின் பரிந்துரை

ஆனால், சம்பவத்தன்று (3.6.2020) வீட்டுக்கு வந்த செந்தில்முருகன், கதவைத் தட்டினார். நான் சமையல் செய்துகொண்டிருந்தேன். லட்சுமி படுத்திருந்தாள். கதவு தட்டப்பட்ட சத்தம் கேட்டு இருவரும் வெளியில் வந்தோம். அப்போதுதான் பெட்ரோலை எங்கள் இருவர் மீதும் ஊற்றிய செந்தில்முருகன், தீ வைத்துக் கொளுத்திவிட்டார்’ என்று கூறியுள்ளார். அதன்அடிப்படையில் செந்தில் முருகனைக் கைது செய்துள்ளோம்" என்றனர்.

62 வயது முதியவருடன் மனைவி பழகியதைக் கண்டித்த கணவர், அவரைக் கொலை செய்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு