Published:Updated:

வேறு பெண்ணுடன் தொடர்பு; கண்டித்த காதல் மனைவி கொன்று புதைப்பு - இரண்டு மாதங்களாக நாடகமாடிய கணவன் கைது

கணவன் கைது

வேலூர் அருகே வேறொரு பெண்ணுடனான தொடர்பால், தனது காதல் மனைவியைக் கொன்று புதைத்துவிட்டு, இரண்டு மாதங்களாக நாடகமாடிவந்த கணவனை போலீஸார் கைதுசெய்தனர்.

வேறு பெண்ணுடன் தொடர்பு; கண்டித்த காதல் மனைவி கொன்று புதைப்பு - இரண்டு மாதங்களாக நாடகமாடிய கணவன் கைது

வேலூர் அருகே வேறொரு பெண்ணுடனான தொடர்பால், தனது காதல் மனைவியைக் கொன்று புதைத்துவிட்டு, இரண்டு மாதங்களாக நாடகமாடிவந்த கணவனை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
கணவன் கைது

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகேயுள்ள வடுகந்தாங்கல் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் என்ற விநாயகம். இவரும், குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவரின் 24 வயது மகள் சுப்ரஜா என்பவரும், வேலூரில் இருக்கும் தனியார் ஐ.டி.ஐ-யில் ஒன்றாகப் படித்தபோதிலிருந்தே காதலித்துள்ளனர். மகளின் காதல் விவகாரம் தெரியவந்தவுடன், பெற்றோர் ஆரம்பத்திலேயே கண்டித்துள்ளனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறிய சுப்ரஜா, காதலன் விநாயகத்தை மணமுடித்தார். இருவரும் கே.வி.குப்பம் அருகேயுள்ள முடினாம்பட்டு கிராமத்தில், வாடகைக்கு வீடு எடுத்து இல்லற வாழ்ககையைத் தொடங்கினர்.

விநாயகம்
விநாயகம்

குழந்தை பிறந்து 2 வயது ஆன நிலையில், விநாயகத்துக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த சுப்ரஜா, கணவனிடம் சண்டை போட்டுள்ளார். தகராறு நீடிக்கவே, ஜனவரி 19-ம் தேதியிலிருந்து சுப்ரஜாவை திடீரென காணவில்லை. அவர் எங்கேயோ சென்றுவிட்டதாகக் கூறி கடந்த இரண்டு மாதங்களாக காதல் கணவன் விநாயகம் நாடகமாடிவந்துள்ளார். சுப்ரஜாவின் அத்தை தனலட்சுமி, வீட்டுக்குச் சென்று சுப்ரஜாவைப் பற்றிக் கேட்கும்போதெல்லாம் விநாயகம் மழுப்பலாகவே பதில் கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனால் சந்தேகமடைந்த தனலட்சுமி, நேற்று முன்தினம் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் சுப்ரஜாவைக் கண்டுபிடித்துத் தரக் கோரியும், அவர் மாயமான விவகாரத்தில் அவரின் கணவன் மீதே சந்தேகம் இருப்பதாகவும் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, கணவன் விநாயகம், அவரின் தம்பி விஜய், உறவினரான 18 வயது சிறுவன் மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். அப்போது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தனது காதல் மனைவி சுப்ரஜாவைக் கொன்று, அருகிலுள்ள சர்க்கார் தோப்பில் புதைத்துவிட்டதாகக் கூறி விநாயகம் அதிரவைத்துள்ளார்.

சுப்ரஜா
சுப்ரஜா

விநாயகம் சொன்ன இடத்துக்கு நேற்று மாலை போலீஸார் சென்று தோண்டிப் பார்த்தனர். அப்போது, அழுகிய நிலையில் சுப்ரஜாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக உடல் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கணவன் விநாயகம், அவரின் தம்பி விஜய் இரண்டு பேரையும் கைது செய்த போலீஸார், காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கொலையில் தொடர்புடைய மூன்றாவது குற்றவாளியான 18 வயது சிறுவனை மட்டும் செங்கல்பட்டில் உள்ள சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம், கே.வி.குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.