Published:Updated:

தூத்துக்குடி: செல்போனில் பேசியதால் விபரீதம் - திருமணமான 4 மாதத்தில் மனைவியைக் கொலைசெய்த கணவன்!

கொலைசெய்யப்பட்ட மாரிச்செல்வி - கணவர் பொன்ராஜ்

தூத்துக்குடியில் திருமணமான நான்கு மாதங்களில் மனைவியை கணவனே வெட்டிக் கொலைசெய்த சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கொலைசெய்த கணவர் உள்ளிட்ட மூன்று பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி: செல்போனில் பேசியதால் விபரீதம் - திருமணமான 4 மாதத்தில் மனைவியைக் கொலைசெய்த கணவன்!

தூத்துக்குடியில் திருமணமான நான்கு மாதங்களில் மனைவியை கணவனே வெட்டிக் கொலைசெய்த சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கொலைசெய்த கணவர் உள்ளிட்ட மூன்று பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.

Published:Updated:
கொலைசெய்யப்பட்ட மாரிச்செல்வி - கணவர் பொன்ராஜ்

தூத்துக்குடி, தாளமுத்துநகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவரின் மகள் மாரிச்செல்வி. இவருக்கும், அண்ணாநகர் 10-வது தெருவைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவருக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. பொன்ராஜ், கார் டிரைவராக வேலை பார்த்துவருகிறார். திருமணமான நாளிலிருந்து மனைவி மாரிச்செல்வி, அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டே இருப்பாராம். இதை பொன்ராஜ் கண்டித்திருக்கிறார். இதனால், தம்பதியரிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மீண்டும் இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டதாம்.

சோகத்தில் உறவினர்கள்
சோகத்தில் உறவினர்கள்

இதையடுத்து, மாரிச்செல்வியை தாளமுத்துநகரிலுள்ள அவரின் அப்பா சண்முகம் வீட்டில் விட்டுவிட்டாராம். இரண்டு நாள்களுக்கு முன்பு பொன்ராஜின் மாமியார் மாரியம்மாள் பொன்ராஜுக்கு போன் செய்து, ``மகளை அழைத்துச் செல்லுங்கள்” எனக் கூறினாராம். ஆனால், ``அவளுடன் எனக்கு வாழப் பிடிக்கவில்லை. உங்கள் மகளை வீட்டிலேயே வைத்துக்கொள்ளுங்கள்” எனச் சொல்லிவிட்டாராம் பொன்ராஜ். இதனால் இரு வீட்டாருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், நேற்று இரவு பொன்ராஜ், தனது நண்பர்கள் இருவருடன் மாரிச்செல்வியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது திடீரென மாரிச்செல்வியை அரிவாளால் சரமாரியாக வெட்டியிருக்கிறார். இதைத் தடுக்க முயன்ற அவரின் மாமியார் மாரியம்மாளின் கைப் பகுதியில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதில், மாரிச்செல்வி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து தாளமுத்துநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவருகின்றனர்.

கொலை நடந்த மாரிச்செல்வியின் வீடு
கொலை நடந்த மாரிச்செல்வியின் வீடு

திருமணமாகி நான்கு மாதங்களே ஆனதால், தூத்துக்குடி கோட்டாட்சியர் விசாரணை நடத்திவருகிறார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக பொன்ராஜ், அவருடைய நண்பர்களான முத்துக்குமார், மந்திரமூர்த்தி ஆகியோரை போலீஸார் தேடிவருகின்றனர். வீடு புகுந்து மனைவியை கணவனே சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.