Published:Updated:

திருச்சி: " திருமணத்தைத் தாண்டிய உறவு; கண்டித்த வாய் பேசமுடியாத கணவனைத் திட்டமிட்டு கொன்ற மனைவி!"

கொலை
கொலை

திருமணத்தைத் தாண்டிய உறவு வைத்திருந்த மனைவியைக் கண்டித்தற்காக இரண்டு வாரமாகத் திட்டமிட்டு கணவன் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி தாரா நல்லூர் பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் சேக்தாவூத். இவர் கேட்கும் மற்றும் பேசும் திறன் அற்றவர். தையல் கடையில் வேலை பார்த்துவந்தார். இவருடைய மனைவி ரகமத்பேகம். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஷேக் தாவூத் நெஞ்சு வலியால் இறந்து விட்டார் என அவரது மனைவி கூறியுள்ளார்.

திருச்சி போலீஸார்
திருச்சி போலீஸார்

சேக்தாவூத் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அறிந்த அப்பகுதி மக்கள் காந்திமார்க்கெட் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். புகாரின் பெயரில் காந்திமார்க்கெட் போலீஸார் ரகமத்பேகத்திடம் நடத்திய விசாரணையில், நாங்கள் தான் திட்டமிட்டு கொலை செய்தோம் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். இதையடுத்து, மனைவி உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர் சுகுமாரிடம் பேசினோம்.”சேக்தாவூத்தின் அம்மா, அப்பா, குழந்தைகள் உள்ளிட்ட அனைவருமே கேட்கும் மற்றும் பேசும் திறன் அற்றவர்கள். இவர்கள் குடும்பத்தில் பேசக்கூடியவர் என்றால் ரகமத்பேகம் மட்டும் தான். இந்நிலையில் ரகமத்பேகத்திற்கும் சேக்தாவூத்தின் தங்கையின் கணவர் அப்துல்அஜீஸ் நீண்ட நாட்களாகப் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் ரமலான் நேரத்தில் இரண்டு பேரும் ஒன்றாகச் சேர்ந்து துணியெடுக்க ஜவுளிக்கடைக்குச் சென்றிருக்கிறார்கள். இதனை அவர்களது உறவினர்கள் பார்த்துத் திட்டியதோடு சேக்தாவூத்திடமும் சொல்லியிருக்கிறார்கள்.

இன்ஸ்பெக்டர் சுகுமார்
இன்ஸ்பெக்டர் சுகுமார்

இதனால் ஆத்திரம் அடைந்ததோடு அவர் மனைவியைக் கடுமையாகத் திட்டி அடித்திருக்கிறார். இதனால் டென்ஷன் ஆன அவரது மனைவி மற்றும் அப்துல்அஜீஸ் இருவரும் இரண்டு வாரங்களாகத் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். பின்பு பாலில் தூக்க மாத்திரை கலந்துக்கொடுத்து தூங்க வைத்ததோடு,. கை,கால்களைக் கட்டுப்போட்டுவிட்டு அப்துல் அஜீஸ்க்கு போன் அடித்து வரவைத்துள்ளார். அவர் வந்ததும் வெளியில் கத்திவிடாமல் இருக்க தலையணை கொண்டு முகத்தை அமுக்கி கொலை செய்திருக்கிறார்கள்.

கொலை
கொலை

சேக்தாவூத் இறந்துவிட்டார் என்பதனை தெரிந்துகொண்ட இருவருமே வீட்டில் தூங்கச் செல்கிறார்கள். காலையில் நெஞ்சுவலியால் இறந்துவிட்டார் என்று மனைவி நாடகம் ஆடுகிறார். அவரது உறவினர் தகவல் கொடுக்க நாங்கள் விசாரித்தோம். முதலில் எங்களிடம் பொய் சொன்னார். அவரது பேச்சில் முன்னுக்குப்பின் முரணான தகவல் இருந்தது பின்பு விசாரிக்கையில் உண்மையை ஒப்புக்கொண்டார். இருவரையும் கைது செய்துள்ளோம். " என்றார்.

அடுத்த கட்டுரைக்கு