Published:Updated:

`டிக்டாக் வீடியோ.. ஆத்திரம்.. உதவினால் 7 லட்சம்!'- ராய்ப்பூருக்கு அதிர்ச்சி கொடுத்த சகோதரிகள் கொலை

பட்டப்பகலில் விடுதியில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். வாலிபர்கள் விடுதி அறைக்குள் வருவதும் அங்கிருந்து தப்பித்து ஓடுவதும் போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.

சகோதரிகள் மனிஷா, மஞ்சு
சகோதரிகள் மனிஷா, மஞ்சு

சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் உள்ள கோதாவரி ஏரியாவில் உள்ள தனியார் ஹாஸ்டலில் மனிஷா சிதார் மற்றும் மஞ்சு சிதார் என்ற சகோதரிகள் தங்கியுள்ளனர். இதற்கிடையே, கடந்த செவ்வாய்க்கிழமை இவர்கள் அறைக்கு இரண்டு வாலிபர்கள் வந்துள்ளனர். நீண்ட நேரம் அவர்கள் பேசிக்கொண்டிருந்த நிலையில், திடீரென அவர்கள் அறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது.

சகோதரிகள் மனிஷா, மஞ்சு
சகோதரிகள் மனிஷா, மஞ்சு

அந்தச் சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அங்கிருந்த வாலிபர்கள் ஓடிவிட்டனர். ஆனால், அந்தச் சகோதரிகள் கொடூரமான முறையில் தலையில் தாக்கப்பட்டு அறையிலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளனர். உடனே அவர்களை மீட்ட மக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், சகோதரிகள் அதற்குள்ளாகவே இறந்துவிட்டனர்.

`சூட்கேஸில் உடல் பாகங்கள்; ஸ்வெட்டரை வைத்து அடையாளம்'- தந்தையைக் கொலை செய்த வளர்ப்பு மகள்!

பட்டப்பகலில் ஹாஸ்டலில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். வாலிபர்கள் ஹாஸ்டல் அறைக்குள் வருவது, அங்கிருந்து தப்பித்து ஓடுவது போன்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி-யில் பதிவானதை வைத்து அந்த இளைஞர்கள் யார் என்பதையும் அவர்களுக்கும் சகோதரிகளுக்கும் என்ன தொடர்பு என்பது தொடர்பாகவும் போலீஸார் விசாரணை நடத்தினர். அதன்படி சகோதரிகளை தாக்கியது அவர்களின் பகுதியைச் சேர்ந்த சயீப், குலாம் முஸ்தபா என்பது தெரியவந்தது.

சயீப், குலாம் முஸ்தபா
சயீப், குலாம் முஸ்தபா

சொந்த ஊர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சகோதரிகளை தாக்கியதில் முன்விரோதம் எதுவும் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். அதில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாயின. இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், ``சகோதரிகளான மனிஷாவும் மஞ்சுவும் ராய்காட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதில் மனிஷா ராய்ப்பூரில் தங்கி நர்சிங் படித்துவந்துள்ளார். மஞ்சுவோ ஏற்கெனவே நர்சிங் படித்துள்ளார். மஞ்சு அதே பகுதியில் உள்ள சயீப்பை காதலித்துவந்துள்ளார். இருவருக்கும் திருமணமான சான்றிதழ் சயீப் வீட்டில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

`சமைக்கமாட்டாள்; தாயை அசிங்கமாகத் திட்டினாள்'- மனைவியைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய சென்னை டிரைவர்

திருமணம் ஆகியிருந்தாலும் மஞ்சு வீட்டில் அவர்களுக்கு எதிர்ப்பு இருந்துள்ளது. குடும்பத்தின் நிர்பந்தம் காரணமாக சயீப்பை விட்டு விலகியுள்ளார். தொடர்ந்து அவரை சந்திப்பதைத் தவிர்த்துவந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. போலீஸ் ஸ்டேஷன் வரை தகராறு செல்ல, பேச்சுவார்த்தை மூலம் இருவரும் தனித்தனியாக வாழத்தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே நர்சிங் படித்துள்ள மஞ்சு கடந்த 10 நாள்களுக்கு முன்பு சகோதரி மனிஷாவுக்கு பரீட்சை வருவதால் அவருக்கு உதவியாக இருப்பதற்காக ராய்ப்பூர் ஹாஸ்டலுக்கு வந்து தங்கியுள்ளார்.

சயீப், குலாம் முஸ்தபா
சயீப், குலாம் முஸ்தபா

கொலைச் சம்பவம் நடப்பதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு மஞ்சு மற்றொரு இளைஞருடன் டிக்டாக் வீடியோ எடுத்துப் பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே மஞ்சு மீது ஆத்திரத்தில் இருந்த சயீப் அந்த வீடியோவைப் பார்த்து மேலும் கோபமடைந்துள்ளார். `இனி என்னநடந்தாலும் மஞ்சு இருக்கக் கூடாது அவரை ஏதாவது செய்ய வேண்டும்' எனத் திட்டமிட்டு தன் நண்பன் முஸ்தபாவின் உதவியை நாடியுள்ளார்.

`போலீஸ் வேலை டு கொலை வழக்கு..!’- கோவை சிறுமி பாலியல் வழக்கில் தேடப்படும் மணிகண்டனின் பின்னணி

அவரிடம் மஞ்சுவைக் கொலை செய்ய வேண்டும். அதற்கு உதவியாக இருந்தால் 7 லட்சம் கொடுப்பதாக உறுதி அளித்து அவரது பைக்கை எடுத்து சகோதரிகள் தங்கியிருந்த ராய்ப்பூர் ஹாஸ்டலுக்கு வந்துள்ளனர். ஹாஸ்டல் அறைக்குச் சென்று சுமார் ஒருமணி நேரத்துக்கும் மேலாக இருவரும் பேசியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட தோசை தவா
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட தோசை தவா

இதில் ஆத்திரமடைந்த சயீப் மஞ்சுவை அடித்தே கொலை செய்துள்ளார். அவரைத் தடுத்த மஞ்சுவின் சகோதரி மனிஷாவையும் கொலை செய்துள்ளார்" என்றனர்.

கொலை சம்பவத்தன்று மனிஷா கல்லூரிக்குச் செல்வதற்காக சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளார். அப்போது சயீப்பும் மஞ்சுவும் அதிக சத்தமாகப் பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

`புதையல்; போதையில் உளறல்; துப்பாக்கி முனையில் கொலை!’- கூலிப்படையுடன் சிக்கிய போலீஸ் அதிகாரி மகன்

அதைக்கேட்டு அவர்களைப் பார்க்கச் சென்றபோது அருகில் இருந்த தோசை தவாவை வைத்து மஞ்சுவை தலையில் தாக்கியுள்ளார் சயீப். இதை மனிஷா தடுக்கும்போது அவரையும் அதே தோசை தவாவை வைத்தே அடித்துக் கொன்றுள்ளனர் சயீப்பும் அவரின் நண்பர் முஸ்தபாவும். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி தாங்கள் கொண்டுவந்த பைக்கில் தப்பி ஓடியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட இடம்
கொலை செய்யப்பட்ட இடம்

எனினும் சிசிடிவி காட்சிகளில் அவர்களது முகம் சிக்கவே இருவரையும் போலீஸார் கண்டுபிடித்துவிட்டனர். காலை 10 மணி அளவில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தையே அதிரவைக்க விஷயம் பூதாகரமானது. பின்னர் போலீஸார் விரைந்து விசாரணை நடத்தியதில் உண்மைச் சம்பவங்கள் வெளிவந்துள்ளன. தற்போது கொலைக்கு உதவிய சிறுவன் குலாம் முஸ்தபா உட்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை... நண்பர்களுக்கிடையே மோதலில் கொலை! - நெய்வேலி அதிர்ச்சி