Published:Updated:

ஆபாசப் படத்தில் நடித்ததாக சந்தேகம் - குழந்தைகள் கண்முன்னே மனைவியை குத்திக் கொன்ற கணவன்

கத்தியால் குத்தி கொலை

ஆபாசப் படத்தில் தன் மனைவி நடித்துள்ளதாக சந்தேகப்பட்டு மனைவியைக் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. 

ஆபாசப் படத்தில் நடித்ததாக சந்தேகம் - குழந்தைகள் கண்முன்னே மனைவியை குத்திக் கொன்ற கணவன்

ஆபாசப் படத்தில் தன் மனைவி நடித்துள்ளதாக சந்தேகப்பட்டு மனைவியைக் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. 

Published:Updated:
கத்தியால் குத்தி கொலை

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஷம்மன்னா கார்டனைச் சேர்ந்தவர் ஜஹீர் பாஷா. இவருக்கும் பி.எம் சாலையில் உள்ள ரஹ்மானியா நகரில் வசித்து வந்த அஃபீனா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன் ஜஹீர்  பாட்ஷா ஆபாசப் படம் ஒன்றை பார்த்ததாகவும், அதில் தன் மனைவி நடித்துள்ளார் எனவும் சந்தேகமடைந்ததாகக் கூறப்படுகிறது. 

குற்றம்
குற்றம்

இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து,  இரண்டு மாதங்களுக்கு முன்பு கோலாரில் நடந்த ஒரு குடும்ப விழாவில் ஜஹீர் பாஷா ஆபாசப் படத்தில் நடித்தது தொடர்பான வாக்குவாதத்தில் அஃபீனாவைத் தாக்கியதாகவும்,  அப்போதுதான் பாஷாவின் துன்புறுத்தல் பற்றி மற்ற குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், சுமார் 20 நாள்களுக்கு முன்பு பாஷா தனது மனைவியை மிகவும் கொடூரமாகத் தாக்கியதால் அவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலம்பெற்று வந்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், அவரின் மனதிலிருந்த கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:30 மணியளவில் தனது மனைவியைக் கொடூரமாகப் பெற்ற பிள்ளைகளின் கண் முன்னே கத்தியால் குத்தி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. தனது தாயைக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை முதல் மகன் தனது தாத்தா கௌஸ் பாஷாவின் வீட்டிற்குச் சென்று கூறியபின்பே காவல்துறையில் புகாரளிக்கப்பட்டு ஜஹீர் பாஷா கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவில் கணவனே, பெற்ற குழந்தைகள் கண்முன்னே மனைவியை கொலை செய்திருக்கும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism