Published:Updated:

கோவை: கருகிய தோசை; மனைவியுடன் தொடர் தகராறு! - விபரீத முடிவெடுத்த கணவர்

தற்கொலை (Representational Image)
தற்கொலை (Representational Image)

கோவை சிங்காநல்லூர் அருகே தோசை கருகிய விவகாரத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், கணவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கோவை சிங்காநல்லூர், எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி நாராயணசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி (52). கட்டட தொழிலாளியான இவருக்கு மாதவி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். பழனி குடிபோதைக்கு அடிமையாகிருப்பதால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்திருக்கிறது.

கோவை
கோவை
கோவை தனியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி தற்கொலை! - வழிகாட்டியின் அழுத்தம் காரணமா?

நேற்று இரவு பழனி குடிபோதையில் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது, மனைவி இரவு டிபன் சமைத்துக்கொண்டிருந்தார்.

தோசை சுட்ட மாதவி, அதைக் கணவர் பழனிக்கு பரிமாறிஇருக்கிறார். அதில் ஒரு தோசை கருகிப்போயிருந்திருக்கிறது. இது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது தகராறாக மாறியது. ஆத்திரத்தில் தனது அறைக்கதவை பழனி பூட்டிக்கொண்டார். பின்னர் கதவை உடைத்துப் பார்த்தபோது, பழனி வேட்டியால் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தோசை - சித்திரிப்புப் படம்
தோசை - சித்திரிப்புப் படம்
கோப்புப் படம்

இது குறித்து தகவலறிந்து சிங்காநல்லூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதையடுத்து, பழனியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விசாரணையில் அவர் ஏற்கெனவே குடும்பத் தகராறில், இதற்கு முன்பு நான்கு முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. அப்போதெல்லாம் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டிருக்கிறார். ஆனால், ஐந்தாவது முறை தூக்கிட்டபோது உயிரிழந்துவிட்டார். இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

தூக்கு
தூக்கு
கோப்புப் படம்

‘தோசை கருகியது ஒரு காரணம் என்றாலும், இவர்களுக்குள் குடும்பத் தகராறு இருந்தது. அது தோசை விவகாரத்தில் வெடித்துவிட்டது’ என்று போலீஸார் கூறியுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு