Published:Updated:

கரூர்: போதையில் மனைவியைக் கொன்ற இளைஞர்! - போலீஸுக்கு பயந்து தற்கொலை!

தற்கொலை

கோபமான சுப்பிரமணி அருகில் கிடந்த கல்லை எடுத்து சின்னப்பொண்ணுவின் தலையில் போட்டு கொலை செய்திருக்கிறார்.

கரூர்: போதையில் மனைவியைக் கொன்ற இளைஞர்! - போலீஸுக்கு பயந்து தற்கொலை!

கோபமான சுப்பிரமணி அருகில் கிடந்த கல்லை எடுத்து சின்னப்பொண்ணுவின் தலையில் போட்டு கொலை செய்திருக்கிறார்.

Published:Updated:
தற்கொலை

கரூரில், போதையில் மனைவி தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற இளைஞர் ஒருவர், போலீஸுக்கு பயந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கரூர் மாவட்டம், காந்திகிராமம் தெற்கு இந்திரா நகர் நாயக்கர் தெருவில் வசிக்கும் அழகர்சாமியின் மகன் சுப்பிரமணி. இவரின் மனைவி சின்னபொண்ணு. இருவருக்கும் திருமணமாகி, அருண்குமார், அஜித்குமார் என்ற இரு மகன்களும், நந்தினி என்ற மகளும் இருக்கின்றனர். குடிப்பழக்கமுள்ள சுப்பிரமணி தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியோடு சண்டை போடுவார் என்கின்றனர். இந்தநிலையில், நேற்று இரவு வழக்கம்போல சுப்பிரமணி குடித்துவிட்டு வந்ததால், இருவருக்கும் தகராறு முற்றியிருக்கிறது. இதனால் கோபமடைந்த சுப்பிரமணி அருகில் கிடந்த கல்லை எடுத்து சின்னப்பொண்ணுவின் தலையில் போட்டுக் கொலை செய்திருக்கிறார்.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

அதன் பிறகு, நிலைமையைப் புரிந்துகொண்டு போலீஸுக்கு பயந்து மதுபோதையில் வீட்டுக்கு அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் வந்த சரக்கு வண்டியின் மீது பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இந்தத் தகவலை அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கரூர் டி.எஸ்.பி தேவராஜ், விசாரணை மேற்கொண்டு பிரேதத்தைக் கைப்பற்றி கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள அனுப்பிவைத்தார். அளவுக்கு அதிகமான மதுபோதையில் மனைவியைக் கொன்றுவிட்டு, இளைஞர் ஒருவர் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism