Published:Updated:

தூத்துக்குடி: உள்புறம் பூட்டப்பட்ட வீட்டில் சடலமாகக் கிடந்த தாய், தந்தை! - அதிர்ந்துபோன குழந்தைகள்

கிழக்கு காவல் நிலையம்

கடன் பிரச்னை தொடர்பாக கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதும், அதனால் ஏற்படும் சண்டையை அக்கம் பக்கத்தினர் விலக்கிவிடுவதும் வழக்கமாக இருந்துவந்திருக்கிறது.

தூத்துக்குடி: உள்புறம் பூட்டப்பட்ட வீட்டில் சடலமாகக் கிடந்த தாய், தந்தை! - அதிர்ந்துபோன குழந்தைகள்

கடன் பிரச்னை தொடர்பாக கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதும், அதனால் ஏற்படும் சண்டையை அக்கம் பக்கத்தினர் விலக்கிவிடுவதும் வழக்கமாக இருந்துவந்திருக்கிறது.

Published:Updated:
கிழக்கு காவல் நிலையம்

தூத்துக்குடி மாவட்டம், இலுப்பையூரணி அருகேயுள்ள பெருமாள்நகரைச் சேர்ந்தவர் ராஜபாண்டி.  இவர், கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்துவந்தார். இவர் மனைவி பரணிச்செல்வி. இவர், பெட்டிக்கடை நடத்திவந்தார். இவர்களுக்கு மனோஜ் குமார் என்ற மகனும், உமா மகேஸ்வரி என்ற மகளும் இருக்கின்றனர். பெருமாள்நகரில் புதிதாக வீடு கட்டிய ராஜபாண்டி, கடந்த ஜூலை மாதம்தான் குடியேறி அங்கு குடியேறியிருக்கிறார். வீடு கட்டுவதற்காக இருவருமே தனித்தனியாகக் கடன் வாங்கியதாகவும், ஒருகட்டத்தில் வாங்கிய கடனுக்கான தவணையை கடந்த மூன்று மாதங்களாக அடைக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

ராஜபாண்டி- பரணிச்செல்வி
ராஜபாண்டி- பரணிச்செல்வி

கடன் பிரச்னை தொடர்பாக கணவன், மனைவி இருவருக்கும் இடையே  அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதும், அதனால் ஏற்படும் சண்டையை அக்கம் பக்கத்தினர் விலக்கிவிடுவதும் வழக்கமாக இருந்துவந்திருக்கிறது. இந்த நிலையில், நேற்று இரவில் டியூஷனுக்குச் சென்றுவிட்டு ராஜபாண்டியின் மகனும் மகளும் வீட்டுக்கு வந்திருக்கின்றனர். அப்போது வீடு உள்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. இருவரும் கதவைத் தட்டிப் பார்த்திருக்கின்றனர்.

நீண்ட நேரமாக கதவு திறக்காததால் சந்தேகமடைந்த மனோஜ்குமார், தாயின் செல்போனுக்குத் தொடர்புகொண்டும் போனை எடுக்காததால், ஜன்னல் வழியாகப் பார்த்திருக்கிறார். அப்போது தாயும் தந்தையும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து கத்திக் கூச்சலிட்டார். இதனையடுத்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்துக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்திருக்கின்றனர். போலீஸார் கதவை உடைத்துப் பார்த்தனர். இதில், பரணிச்செல்வி கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும், ராஜபாண்டி கழுத்தில் கத்திக் குத்து விழுந்த நிலையிலும் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தனர்.

கோவில்பட்டி
கோவில்பட்டி

கடன் தொல்லையால் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கிக்கொண்டு உயிரிழந்தார்களா அல்லது தகராறில் ராஜபாண்டி தன் மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றாரா அல்லது வேறு ஏதும் காரணமா என போலீஸார் பல கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்.