Published:Updated:

`பாலியல் வன்கொடுமை சம்பவத்தைப் படமாக்குகிறேன் என்றார்; ஆனால்...' ராம் கோபால் வர்மாமீது புகார்

ராம் கோபால் வர்மா

பாலிவுட் தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மா மீது ரூ.56 லட்சம் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

`பாலியல் வன்கொடுமை சம்பவத்தைப் படமாக்குகிறேன் என்றார்; ஆனால்...' ராம் கோபால் வர்மாமீது புகார்

பாலிவுட் தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மா மீது ரூ.56 லட்சம் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published:Updated:
ராம் கோபால் வர்மா

ஐதராபாத்தை சேர்ந்த திரைப்படத்தயாரிப்பாளர் கோப்பட சேகர் ராஜு பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான ராம் கோபால் வர்மாமீது மோசடி புகார் கொடுத்திருக்கிறார். ஐதராபாத் அருகே 2019-ம் ஆண்டு நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை தொடர்பாக `திஷா' என்ற பெயரில் படம் தயாரிக்க ராம் கோபால் வர்மாவிற்கு ராஜூ 2020-ம் ஆண்டு முதலில் 8 லட்சமும் அடுத்த சில நாட்களில் மேலும் 20 லட்சமும் கொடுத்தார். படம் வெளியாவதற்கு முன்பு பணத்தைக் கொடுத்துவிடுவதாக ராம் கோபால் வர்மா உறுதியளித்திருந்ததாக ராஜு தனது புகாரில் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக ராஜு ஐதராபாத் போலீஸில் கொடுத்துள்ள புகாரில், "ராம் கோபால் வர்மாவுடன் கலந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரமணா ரெட்டி என்பவர் மூலம் அறிமுகம் ஏற்பட்டது.

 ராம் கோபால் வர்மா
ராம் கோபால் வர்மா

ஐதராபாத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை மையமாக வைத்து திஷா என்ற பெயரில் படம் எடுக்க ராம் கோபால் வர்மாவிடம் 2020 -ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் மூன்று தவணையாக ரூ.56 லட்சம் கொடுத்தேன். பணத்தை முழுமையாகக் கொடுத்துவிடுவதாகவும், அல்லது படத்தை வெளியிடுவதற்கு முன்பு பணத்தைக் கொடுத்துவிடுவதாக ராம் கோபால் வர்மா தெரிவித்தார். ஆனால் 2021-ம் ஆண்டுதான் ராம் கோபால் வர்மா படமே தயாரிக்கவில்லை என்று தெரிந்துகொண்டேன். படம் தயாரிப்பதாகக்கூறி பணம் வாங்கி ஏமாற்றிவிட்டார் என்று தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அப்புகாரின் அடிப்படையில் ஐதாராபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மோசடி, நம்பிக்கையை மீறியது உட்பட பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism