Published:Updated:

உறவினர் வீட்டு விசேஷத்துக்கு வராத மனைவி... மனவிரக்தியில் விபரீத முடிவெடுத்த கணவன்!

மனவிரக்தியில் விபரீத முடிவெடுத்த கணவன்

அம்மா வீட்டுக்குச் சென்ற மனைவி, உறவினர் வீட்டு விசேஷத்துக்கு வராததால் மனவிரக்தியில் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உறவினர் வீட்டு விசேஷத்துக்கு வராத மனைவி... மனவிரக்தியில் விபரீத முடிவெடுத்த கணவன்!

அம்மா வீட்டுக்குச் சென்ற மனைவி, உறவினர் வீட்டு விசேஷத்துக்கு வராததால் மனவிரக்தியில் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
மனவிரக்தியில் விபரீத முடிவெடுத்த கணவன்

ஹைதராபாத், பஹாடிஷரீப் பகுதியில் கார்த்திக் கவுட் என்பவர் தன் மனைவியுடன் வசித்துவந்தார். கார்த்திக்கும் அவர் மனைவியும் கடந்த சில தினங்களுக்கு முன்பு உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்துகொள்ளச் சென்றனர். திருமணம் முடிந்து இருவரும் திரும்பும்போது கார்த்திக்கின் மனைவி கந்துகுருவில் உள்ள அவர் பெற்றோரைப் பார்க்கச் சென்றுவருவதாகக் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். அதனால், கார்த்திக் பஹாடிஷரீப்பில் உள்ள தன் வீட்டுக்கு வந்துவிட்டார்.

மனவிரக்தி
மனவிரக்தி
சித்திரிப்புப் படம்

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய அத்தை வீட்டில் ஒரு விழா இருப்பதாகவும், அதற்குக் கண்டிப்பாகத் தம்பதியாக இருவரும் சென்றாக வேண்டும் எனவும் கார்த்திக் தன் மனைவியை அழைத்திருக்கிறார். ஆரம்பத்தில் சரி என ஒப்புக்கொண்டாலும், அதற்குப் பின்பு கார்த்திக்கின் செல்பேசி அழைப்புக்கு அவர் மனைவி சரியாக பதிலளிக்காமலும், கண்டுகொள்ளாமலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தன் மனைவியை மீண்டும் செல்போனில் அழைத்து வீட்டுக்கு வருமாறு வற்புறுத்தியிருக்கிறார். அப்போதும் மனைவி சரியாகப் பதிலளிக்காமல் புறக்கணித்ததால், பேசிக்கொண்டிருக்கும்போதே தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
தற்கொலை
தற்கொலை

உடனே பதறிய மனைவி, அக்கம் பக்கத்தினரை செல்போனில் அழைத்து, தகவலைக் கூறியிருக்கிறார். அதையடுத்து, அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது வீட்டுக்குள் கார்த்திக் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்திருக்கிறார். அதையடுத்து, இது தொடர்பாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் கார்த்திக்கின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.