ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை கட்டணமில்லாமல் காண தனி செயலியை உருவாக்கி ஸ்டார் டிவி நிறுவனத்துக்கே அதிர்ச்சி கொடுத்த சிவகங்கை இளைஞரை கைது செய்துள்ளது ஹைதராபாத் போலீஸ்.

கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்ப டிவி நிறுவனங்கள் போட்டி போட்டு ஏலம் எடுக்கின்றன. அதிலும், ஐ.பி.எல் போட்டிகளை ஒளிபரப்ப அதிக விலை கொடுத்து எடுக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
2018 முதல் 2022 வரை நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை 16,347 கோடி ரூபாய்க்கு ஸ்டார் இந்தியா நிறுவனம் வாங்கியுள்ளது.
இந்த நிலையில், 'எங்கள் நிறுவனத்தின் ஐ.பி.எல் நேரடி ஒளிபரப்பு எந்தவொரு அனுமதியும் இல்லாமல் செயலி மூலம் ஒளிபரப்பப்படுகிறது. அதில் பல விளம்பரங்களும் வருகின்றன, சட்டவிரோதமாக அந்த செயலியை நடத்துபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கடந்த ஆண்டு ஸ்டார் இந்தியா நிறுவன அதிகாரி கடாரம் துப்பா ஹைதராபாத் சைபர் க்ரைமில் புகார் கொடுத்தார்.

இதை விசாரிக்க ஆரம்பித்த ஹதராபாத் சைபர் க்ரைம் போலீஸாரால் குற்றவாளியை உடனே கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து டிரேஸ் செய்ததில் தமிழ்நாட்டின் சிவகங்கை அருகே காஞ்சிரங்காலைச் சேர்ந்த ராமமூர்த்தி என்று இளைஞர் தான் அந்த செயலியை உருவாக்கியவர் என்பதை கண்டுபிடித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதைத் தொடர்ந்து நேற்று காஞ்சிரங்காலுக்கு வந்த ஹைதராபாத் சைபர் க்ரைம் டீம், ஆறுமுகம் என்பவரின் மகன் ராமமூர்த்தியைக் கைது செய்து சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. பின்னர் கூடுதல் விசாரணைக்காக அவரை ஹைதராபாத் அழைத்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. உலக அளவில் பிரபலமான ஸ்டார் டிவி நிறுவனத்துக்கே அதிர்ச்சி அளிக்கும் வகையில் சட்டவிரோதமான செயலியை உருவாக்கி அதன் மூலம் ஐ.பி.எல் போட்டிகளை ஒளிபரப்பி பல பெரிய நிறுவனங்கள் மூலம் விளம்பர வருவாயை பெற்று கிராமத்துக்குள் அமைதியாக உலாவிக் கொண்டிருந்திருக்கிறார் ராமமூர்த்தி. காவல்துறை கைது செய்தபோதுதான் ஊர்மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.
தன் தொழில்நுட்ப திறமையை ஆக்கப்பூர்வமான முறையில் செயல்படுத்தாமல் குறுக்கு வழியில் செயல்படுத்தி காவல்துறையிடம் தற்போது சிக்கியுள்ளார் ராமமூர்த்தி.