Published:Updated:

`தார்பாயில் சுற்றப்பட்ட உடல்; எரிந்த பிறகும் நோட்டம்’ - ஹைதராபாத் பெண் கொலையில் என்ன நடந்தது?

வழக்கம்போல பைக்கை டோல் கேட்டில் நிறுத்திவிட்டு அங்கிருந்து வாடகைக் கார் மூலம் கச்சிபவ்ளிக்குச் சென்றுள்ளார்.

ஹைதராபாத் பெண்
ஹைதராபாத் பெண்

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரியங்கா ரெட்டி, கொல்லப்பூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிவந்தார். ஷாம்ஷாபாத் பகுதியில் இவரது வீடு அமைந்துள்ளது. இங்கிருந்து தினமும் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 27-ம் தேதி இரவு, வழக்கம்போல் பணிமுடிந்து திரும்பி வரும் வழியில், இவரது இருசக்கர வாகனம் பஞ்சராகியுள்ளது. லாரி ஓட்டுநர் ஒருவர், பஞ்சர் ஒட்டித் தர உதவிசெய்ய முன்வந்துள்ளார். இந்தத் தகவலை தன் குடும்பத்தினருக்கு போன்மூலம் தெரிவித்தார்.

முகமது பாஷா என்ற ஆரீப், கேசவலு, சிவா, நவீன்
முகமது பாஷா என்ற ஆரீப், கேசவலு, சிவா, நவீன்

அதன்பின் சிறிது நேரத்தில், அவரது மொபைல் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகவே பதற்றமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் தேடலுக்குப் பிறகு போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் விசாரணைக்கிடையே ஹைதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைத்துள்ள ஷாத்நகர் பகுதியில் பாலத்துக்குக் கீழே இளம்பெண்ணின் சடலம் இருப்பதாகத் தகவல் வந்தது. எதிர்பார்த்தது போலவே அது பிரியங்காவின் சடலம்தான். அவருக்கு என்ன நடந்தது எனத் தெரியாத மர்மமாக இருக்க இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிரவைத்தது.

இதுதொடர்பாக விசாரித்த போலீஸ் 24 மணிநேரத்தில் நான்கு பேரை அதிரடியாகக் கைது செய்தது. நாராயன்பேட்டை மாவட்ட ஜக்லரைச் சேர்ந்த லாரி டிரைவர்கள் முகமது பாஷா என்ற ஆரீப், நவீன், கிளீனர்கள் கேசவலு, சிவா ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிரியங்கா ரெட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பதைத் தற்போது போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பிரியங்கா ரெட்டி
பிரியங்கா ரெட்டி

பிரியங்காவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து சைதராபாத் போலீஸ் கமிஷனர் சஞ்சனார் பேசியுள்ளார். அதில், ``ஷாம்ஷாபாத் பகுதியில் வசிக்கும் பிரியங்கா வழக்கமாகத் தனது பைக்கைத் தொண்டுப்பள்ளி டோல் கேட்டில் நிறுத்திவிட்டு அங்கிருந்து பேருந்தில் சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று அதேபோல் சென்றுள்ளார். பின்னர் மதியம் வீட்டுக்கு வந்தவர் மாலை 6 மணி அளவில் தோல் அரிப்பு பிரச்னை காரணமாக மருத்துவரைப் பார்க்க வீட்டிலிருந்து கச்சிபவ்ளிக்கு கிளம்பியுள்ளார். வழக்கம்போல பைக்கை டோல் கேட்டில் நிறுத்திவிட்டு அங்கிருந்து வாடகைக் கார் மூலம் கச்சிபவ்ளிக்கு சென்றுள்ளார்.

`நாடகம்.. பாலியல் வன்கொடுமை.. டார்ச்சர்'- ஹைதராபாத் பெண் மருத்துவர் மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

இதேநேரத்தில்தான் செங்கல் லோடு ஏற்றிவந்த லாரி டிரைவர் முகமது பாஷா லோடு இறக்குவதற்காக அங்கு இருந்துள்ளார். ராய்ச்சூரில் இருந்து செங்கல் ஏற்றிவந்தவர்கள் காலையிலேயே தொண்டுப்பள்ளி டோல் கேட் வந்துள்ளனர். செங்கல் லோடு இறக்குவதற்காக சம்பந்தபட்ட நபருக்கு போன் செய்துள்ளனர். ஆனால், அந்த நபர் போனை எடுக்காததால் காலையிலிருந்து அங்கேயே, இருந்துள்ளனர். நால்வரும் மாலையில் அருகில் உள்ள கடையில் மது குடித்துவிட்டு வரும்போது மாலை 6 மணி அளவில் பிரியங்கா பைக் நிறுத்துவதைக் கண்காணித்த முகமது பாஷா தன் கூட்டாளிகளுடன் சதித் திட்டம் தீட்டியுள்ளார்.

எரிக்கப்பட்ட 
 பிரியங்கா ரெட்டி
எரிக்கப்பட்ட பிரியங்கா ரெட்டி

அதன்படி பிரியங்கா பைக்கை எடுக்க வரும்வரை காத்திருப்பது என முடிவு செய்து, அதற்கு முன்னதாக அவரது பைக் டயரை பஞ்சர் செய்ய முடிவு செய்துள்ளனர். திட்டத்தின்படி கிளீனர் சிவா போய் பைக் டயரை பஞ்சர் செய்துள்ளார். பின்னர் அங்கேயே பிரியங்காவுக்காகக் காத்திருந்துள்ளனர். இரவு 9.13 மணிக்கு மருத்துவரைப் பார்த்துவிட்டு பிரியங்கா தனது பைக்கை எடுக்க டோல் கேட் வந்துள்ளார். பைக் பஞ்சராக இருப்பதை அறிந்த அவர் அதை உருட்டிக்கொண்டு செல்ல முயன்றுள்ளார். இதைக் கவனித்த அவர்கள் பிரியங்காவிடம் பேச்சு கொடுத்து பைக்கை சரி செய்ய உதவுவதுபோல் நடித்துள்ளனர்.

`எங்களை மன்னித்துவிடு சிஸ்டர்!’- பெண் மருத்துவர் மரணத்தால் கொதிக்கும் மக்கள் #JusticeForPriyanka

இரவு 9.28 மணியளவில் பஞ்சர் ஒட்டிக்கொண்டுவருவதாக சிவா பிரியங்காவின் பைக்கை எடுத்துச் சென்றுள்ளார். அவர் பைக்கை எடுத்துச் சென்ற பிறகு, மற்ற மூவரும் நடவடிக்கை சரியில்லாமல் இருப்பதை அறிந்த பிரியங்கா தனது வீட்டுக்குப் போன் செய்து விவரத்தைக் கூறியுள்ளார். இந்தச் சமயத்தில் முகமது பாஷா, நவீன், கேசவலு ஆகிய மூவரும் பிரியங்காவை அருகில் இருந்த மதில் சுவருக்குப் பின்னே தூக்கிச் சென்று வன்கொடுமை செய்துள்ளனர். பைக்கைக் கொண்டுசென்ற சிவாவும் திரும்பிவந்து அவரும் வன்கொடுமை செய்துள்ளார்.

எரிக்கப்பட்ட 
 பிரியங்கா ரெட்டி
எரிக்கப்பட்ட பிரியங்கா ரெட்டி

பின்னர் பிரியங்காவை நால்வரும் சேர்ந்து வாய், மூக்கை அடைத்தும், கழுத்தை நெறித்தும் கொலை செய்துள்ளனர். அவரது உடலை அப்புறப்படுத்த நினைத்து தார்பாயை உடல்முழுவதும் சுற்றி தங்களது லாரியில் ஏற்றியுள்ளனர். 10.30 மணி அளவில் சிவாவும் நவீனும் பிரியங்காவின் பைக்கை எடுத்துக்கொண்டு முன்செல்ல, முகமது பாஷாவும் கேசவலுவும் லாரியில் அவர்களைப் பின்தொடர்ந்துள்ளனர். பின்னர் பிரியங்காவை எரித்துவிட நினைத்தவர்கள் அதற்காக அங்கிருந்து 15 மைல் தொலைவு தள்ளி ஷாத்நகர் பகுதியில் பாலத்தைத் தேர்வு செய்துள்ளனர்.

மாமூல் வாங்காததால் கொலை செய்யப்பட்டாரா எஸ்.ஐ?

ஏற்கெனவே தாங்கள் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக பிரியங்காவின் மொபைல் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்த நால்வரும் பைக்கால் பிடிபட்டுவிடக் கூடாது என்பதற்காக பைக்கில் இருந்த நம்பர் பிளேட் உள்ளிட்டவற்றை கழட்டியவர்கள் அவரது பர்ஸ் உள்ளிட்டவற்றையும் எடுத்துள்ளனர். நள்ளிரவு 2.30 மணி அளவில் அந்தப் பாலத்துக்குக் கீழே பிரியங்காவை திட்டமிட்டபடி எரித்தவர்கள் அதன் பிறகு, மீண்டும் சிட்டிக்குள் வந்து எதுவும் தெரியாததுபோல் செங்கல் லோடை இறக்கிவிட்டு மீண்டும் ஷாத்நகர் பாலத்துக்கு வந்து அவரது உடல் முழுமையாக எறிந்துவிட்டதா என்பதை சரிபார்த்துச் சென்றுள்ளனர்.

போலீஸ் கமிஷனர் சஞ்சனார்
போலீஸ் கமிஷனர் சஞ்சனார்

இந்த வழக்கில் சிசிடிவி காட்சிகள் முக்கிய அடையாளமாகக் கிடைத்தது. லாரியில் நீண்ட நேரம் அவர்கள் காத்திருந்தது, பிரியங்காவுடன் பேச்சு கொடுத்தது எனப் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்தன. பிரியங்காவின் பைக்கை எடுத்துக்கொண்டு பழுதுபார்த்து வருவதாக அவர்கள் கூறியுள்ளனர். முதலில் பைக்கை எடுத்துச் சென்றவர்கள் அங்கு கடை இல்லாததால் வேறொரு கடைக்கு செல்வதாகத் தெரிவித்துள்ளனர். அவரைத் தாமதப்படுத்த வேண்டும் என்றே அப்படிச் செய்துள்ளனர். இதையடுத்து நின்று இருந்த இடத்திலிருந்து சில மீட்டர்கள் நடந்து சென்று தனிமையில் பிரியங்கா நின்றுள்ளார். அங்கும் லாரியை நிறுத்தியுள்ளனர். அப்போதுதான் இந்தச் சம்பவம் நடந்து இருக்க வேண்டும் எனச் சந்தேகிக்கிறோம். குற்றவாளிகளைக் கைது செய்துள்ளோம். முழு விசாரணை நடத்தப்படும்" எனக் கூறியுள்ளார்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை... நண்பர்களுக்கிடையே மோதலில் கொலை! - நெய்வேலி அதிர்ச்சி