Published:Updated:

ஹைதராபாத்: கூட்டுப் பாலியல் வன்கொடுமை; போலியான புகார்! - மாணவி தற்கொலையால் அதிர்ச்சி

கல்லூரி மாணவி தற்கொலை
கல்லூரி மாணவி தற்கொலை

தன்னைச் சிலர் கடத்தி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலியாகப் புகார் அளித்த கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தெலங்கானா மாநிலம், கட்கேசர் (Ghatkesar) பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன்னைச் சிலர் கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தன் பெற்றோரிடம் கூறியிருக்கிறார். தொடர்ந்து அவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர்.

சிசிடிவி பதிவு
சிசிடிவி பதிவு

மாணவி பயணித்த ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட நான்கு நபர்களை காவல்துறையினர் கைது ய்து ஆள் கடத்தல், பாலியல் வன்கொடுமை போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை வேகப்படுத்தினர். இந்த விவகாரத்தில் காவல்துறையைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட குழு விசாரணையில் ஈடுபட்டுவந்தது.

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகளைக் காவல்துறையினர் கண்டறிந்தனர். அந்தப் பெண்ணின் புகாரின்படி, அவர் வீட்டுக்கு ஆட்டோவில் வரும்போது தான் இறங்க வேண்டிய இடத்தில் அந்த ஆட்டோ ஓட்டுநர் இறக்கிவிடாமல் வேகமாகச் சென்றதாகவும், அதன் பிறகு சிலர் கூட்டாகச் சேர்ந்து தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.

ராச்சகொண்டா  காவல்துறையினர்
ராச்சகொண்டா காவல்துறையினர்

கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணை, கிடைக்கப்பெற்ற சிசிடிவி பதிவுகள், தடயவியல் சோதனை, அந்த மாணவியிடம் நடத்திய மருத்துவப் பரிசோதனை முடிவுகளில் அந்த மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லை என்பதையும், மாணவி பொய்யான புகாரைக் கூறியிருப்பதையும் காவல்துறை உறுதிசெய்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் பிரச்னை குறித்து ராச்சகொண்டா (Rachakonda) காவல்துறை ஆணையர் மகேஷ் பகவத் (Mahesh Bhagwat), ``கல்லூரி மாணவி ஒருவர் தன்னைச் சிலர் கடத்தி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறினார். அந்தப் புகாரின் அடிப்படையில் எங்கள் காவல்துறையினர் இரவு பகல் பாராமல் விசாரணை மேற்கொண்டனர். கீசரா காவல் நிலைய எல்லையில் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் தெரிவித்திருந்தார். விசாரணையில், அந்தப் பெண்ணை யாரும் கடத்தவில்லை, பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என்பது உறுதியானது" என்றார்.

காவல்துறை ஆணையர் மகேஷ் பகவத்
காவல்துறை ஆணையர் மகேஷ் பகவத்

தொடர்ந்து பேசியவர், ``கைதுசெய்யப்பட்டவர்களிடம் காவல்துறை மன்னிப்புக் கோரியிருக்கிறது. அந்தப் பெண் வீட்டில் சந்தோஷமாக இல்லை என்பதாலும், வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டும் என்பதற்காகவும் இப்படி ஒரு பொய்யான புகாரைத் தெரிவித்திருக்கிறார். முழுமையாக இது ஒரு சித்திரிக்கப்பட்ட புகார். விசாரணை முடிவுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறினார்.

ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார்: பெரும் சதி இருப்பதாக வழக்கை முடித்துவைத்த உச்ச நீதிமன்றம்!

இந்தநிலையில், கூட்டுப் பாலியல் வன்கொடுமை புகார் வழங்கிய மாணவி தனது உறவினர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். "இது மிகவும் முக்கியமான பிரச்னை என்பதால், முழு விசாரணைக்குப் பின்னரே விவரங்களைத் தெரிவிக்க முடியும்” என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு