Published:Updated:

ஐதராபாத்: காரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி... சிறுவர்களால் நேர்ந்த கொடூரம்!

கூட்டு பாலியல் வன்கொடுமை

ஐதராபாத்தில் இரவு பார்ட்டிக்கு சென்று திரும்பிய சிறுமியை காரில் ஒரு கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்: காரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி... சிறுவர்களால் நேர்ந்த கொடூரம்!

ஐதராபாத்தில் இரவு பார்ட்டிக்கு சென்று திரும்பிய சிறுமியை காரில் ஒரு கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
கூட்டு பாலியல் வன்கொடுமை

ஐதராபாத்தில் கடந்த சனிக்கிழமை இரவு பார்ட்டிக்கு தன் நண்பருடன் சென்ற 17 வயது சிறுமி மீண்டும் இல்லம் திரும்பும் போது, உடன் வந்த நண்பன், அவனது நண்பர்கள் காரிலேயே வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டுவிடுவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பின் அந்த பெண்ணை நகரின் தனிமையான பகுதிக்கு அழைத்து சென்று, ஒருவர் பின் ஒருவராக சொகுசு காருக்குள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

 பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இது தொடர்பாக காவல்துறை தரப்பில், "11, 12 - ம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் ஐதராபாத் ஜூப்லி ஹில்ஸில் காரை நிறுத்திவிட்டு, அந்த சிறுமியை மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மற்றவர்கள் காருக்கு வெளியே காவலுக்கு நின்றுள்ளனர். அதன் பின் சிறுமியை வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர்.

சிறுமியின் கழுத்தில் காயங்கள் இருப்பதைக் கண்ட சிறுமியின் தந்தை, அவளிடம் அதைப் பற்றிக் கேட்டபோது, ​​பார்ட்டிக்குப் பிறகு சில சிறுவர்கள் தன்னைத் தாக்கியதாகக் கூறியுள்ளார். ஆனால் அச்சத்தில் பாலியல் வன்கொடுமை குறித்து கூறவில்லை. சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரித்தபோது மேலதிக தகவல்கள் கிடைத்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கூட்டு பாலியல் வன்கொடுமை
கூட்டு பாலியல் வன்கொடுமை

அவர்கள் அனைவரும் அரசியல் செல்வாக்குள்ளவர்கள் என நினைக்கிறோம். அதில் ஒருவர் எம்.எல்.ஏ.வின் மகன் எனத் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், எம்.எல்.ஏ-வின் மகன் அந்த சிறுமியைத் தாக்குவதற்கு முன் காரை விட்டு இறங்கி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், உண்மை என்ன என்பதை விசாரித்து வருகிறோம்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது IPC -ன் பிரிவு 376 , மற்றும் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளோம். என்ன நடந்தது என்பது பற்றி சிறுமிக்குத் தெரியவில்லை, அவர் எதையும் வெளிப்படுத்தும் மனநிலையில் இல்லை. இரவு விடுதி பார்ட்டிக்கு கிளப் எப்படி அனுமதி வழங்கியது என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்" எனக் கூறியுள்ளது.

பாஜக
பாஜக

இந்த சம்பவத்திற்கு தெலங்கானா பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, "இந்த குற்றத்தைச் செய்த ஐந்து பேரில், ஒருவர் எம்.எல்.ஏ-வின் மகன் என்றும் மற்றொருவர் சிறுபான்மைத் தலைவரின் மகன் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கிரிமினல் புகார் அளித்தும் ஐதராபாத் காவல்துறை இதுவரை எந்த குற்றவாளியையும் கைது செய்யவில்லை. இந்த வழக்கில் காவல்துறை மெத்தனமாகச் செயல்படுகிறார்கள்" எனக் குற்றம்சாட்டியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism