Published:Updated:

`நான் சி.எம் டிரைவர்; அமைதியாக இருங்க!'- டிஐஜி-யால் பாதித்த சிறுமி குடும்பத்தை அதிரவைத்த காவலர்

காவலர் டிங்கர் சால்வே
காவலர் டிங்கர் சால்வே

``டிஐஜி-யின் அழுத்தம் காரணமாக, நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என்னைத் தேடாதீர்கள்."

புனே போக்குவரத்து டிஐஜி-யாகப் பதவி வகித்துவருகிறார், நிஷிகாந்த் மோர். சமீபத்தில், இவர்மீது 17 வயதான சிறுமி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார்.`பிறந்தநாள் பார்ட்டியின்போது, டி.ஐ.ஜி நிஷிகாந்த் மோர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதுடன், அவரால் தனக்கு நிறைய அவமானங்கள் நேரிட்டது' என்றும் புகார் கொடுத்திருந்தார்.

புகாரோடு நில்லாமல், கடந்த திங்கள்கிழமை கடிதம் எழுதிவைத்துவிட்டு, வீட்டிலிருந்து வெளியேறினார். அந்தக் கடிதத்தில், `டிஐஜி-யின் அழுத்தம் காரணமாக நான் தற்கொலை செய்துகொள்கிறேன். என்னைத் தேடாதீர்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

டிஐஜி நிஷிகாந்த் மோர்
டிஐஜி நிஷிகாந்த் மோர்

இந்தக் கடிதத்தால், இந்த வழக்கில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம், பாலியல் வழக்கில் டிஐஜி நிஷிகாந்த் மோர் முன்ஜாமீன் கோரிய மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதற்காக, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் பெற்றோர் நீதிமன்ற வாசலில் காத்திருந்தனர்.

அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், ``நான் சி.எம் உத்தவ் தாக்கரேவின் கார் டிரைவர். அமைதியாக இருங்கள்" என்று கூறி, இளம்பெண்ணின் குடும்பத்தை மிரட்டியுள்ளார். மிரட்டல் தொடர்பாகப் பெண்ணின் பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.

`ப்ளீஸ் வீரா... என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ!' -அழகுக்கலை நிபுணர் புகாரால் சிக்கலில் சென்னைக் காவலர்

இதற்கிடையே, நீதிமன்றத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டதை அங்குள்ளவர்கள் வீடியோவாக எடுக்க, தற்போது இந்தச் சம்பவம் வெளியே தெரிந்துள்ளது. பெண்ணின் குடும்பத்தை மிரட்டிய அந்த நபரின் பெயர், டிங்கர் சால்வே என்பதும் போக்குவரத்து காவலரான இவர், உத்தவ் தாக்கரே பதவியேற்பதற்கு 15 நாள்கள் முன்புதான் முதல்வரின் கார் டிரைவர் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது.

காவலர் டிங்கர் சால்வே
காவலர் டிங்கர் சால்வே

இவர், அந்தப் பெண்ணின் குடும்பத்தை மிரட்டியதற்கு சில காரணங்களும் இருக்கின்றன என்று அவரது பின்னணியை வைத்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. காவலர் டிங்கர் சால்வே குற்றம் சாட்டப்பட்ட டி.ஐ.ஜி நிஷிகாந்த் மோர் ஏசிபி-யாக இருந்தபோதே அவருக்குக்கீழ் பணிபுரிந்துள்ளார். இதற்காக அவர் மிரட்டினாரா என்கிற ரீதியில் விசாரணை தொடங்கியுள்ளது.

`போராட்டத்தில் புல்லட் வெஸ்டை துளைத்த குண்டு’ - பர்ஸ்ஸால் மறுபிறவி எடுத்த உ.பி காவலர்!

எனினும், சர்ச்சை வீடியோ தொடர்பாகப் பேசியுள்ள காவலர் டிங்கர் சால்வே, ``கடந்த 15 ஆண்டுகளாக நிஷிகாந்த்தை தெரியும். அவர் நாக்பாடா போக்குவரத்துப் பிரிவில் ஏசிபி-யாக இருந்தபோது, நான் அவருக்குக் கீழ் பணிபுரிந்தேன். நான் 22 ஆண்டுகளாக இந்த வேலையில் இருக்கிறேன். பாலாசாகேப் தாக்கரே பாதுகாப்பு டீம் என, தாக்கரே குடும்பத்துடன் பல வருடங்களாகத் தொடர்பில் இருக்கிறேன்.

காவலர் டிங்கர் சால்வே
காவலர் டிங்கர் சால்வே

அன்று நான் எனது வக்கீலைப் பார்ப்பதற்காக நீதிமன்றத்துக்குச் சென்றேன். அங்கு இருந்த இளம்பெண்ணின் குடும்பத்தைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது" என்றுமட்டும் கூறி, மிரட்டல் குறித்து விளக்கம் கொடுக்காமல் நழுவியுள்ளார்.

இந்த விவகாரம் சர்ச்சையாக மாற, தற்போது டிங்கர் மீது துறைரீதியான விசாரணை தொடங்கியுள்ளது.

`` `கிட்டப் போனா கடிச்சிடுவாரு'ன்னாங்க, ஆனா நான் தயங்கல!'' மனநலம் பாதித்தவரை மீட்ட காவலர்
அடுத்த கட்டுரைக்கு