Published:Updated:

ரூ.224 கோடி வருவாயை மறைத்த தனியார் நிறுவனம் - மகாராஷ்டிரா உட்பட 23 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு

வருமான வரித்துறை ரெய்டு

மகாராஷ்டிரா, கர்நாடகா உட்பட நாடு முழுவதும் 23 இடங்களில் வருமான வரித்துறை நடத்திய ரெய்டில் ரூ.224 கோடி அளவுக்கு வருவாயை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரூ.224 கோடி வருவாயை மறைத்த தனியார் நிறுவனம் - மகாராஷ்டிரா உட்பட 23 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு

மகாராஷ்டிரா, கர்நாடகா உட்பட நாடு முழுவதும் 23 இடங்களில் வருமான வரித்துறை நடத்திய ரெய்டில் ரூ.224 கோடி அளவுக்கு வருவாயை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
வருமான வரித்துறை ரெய்டு

இந்தியா முழுவதும் கட்டுமானப்பொருள்களை சப்ளை செய்து வரும் நிறுவனம் யுனிகார்ன். இந்த நிறுவனம் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வந்த புகாரை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலஙகளில் சுமார் 23 இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தினர். ஸ்டார்ட் அப் நிறுவனமான யுனிகார்ன் ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்கிறது. மகாராஷ்டிராவில் புனே, தானே பகுதிகளில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத ரூ.1 கோடி ரொக்கம், 22 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதிகாரிகளின் ரெய்டில் கம்பெனி நிர்வாகம் போலி கொள்முதல்களை கணக்கு காட்டி அதற்கு அளவுக்கு அதிகமாக செலவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. `ரூ.400 கோடி அளவுக்கு கணக்கில் வராமல் செலவு செய்யப்பட்டிருப்பதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.' என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

ரெய்டு
ரெய்டு
சித்தரிப்புப் படம்

இது குறித்து கம்பெனி இயக்குநர்களிடம் விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ரூ.224 கோடி அளவுக்கு கூடுதல் வருவாய் வந்திருப்பதை ஒப்புக்கொண்டதாகவும், அந்த பணத்திற்கு வரி கட்டிவிடுவதாகவும் தெரிவித்திருகின்றனர். அதிகாரிகள் அவர்களிடம் விசாரித்ததில் மொரீஸியஸ் மூலம் அளவுக்கு அதிகமாக அன்னிய முதலீடுகளை பெற்றிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பை, தானேவில் ஹவாலா பண பரிவர்த்தனைக்காக போலி கம்பெனிகள்(ஷெல்) நடத்தப்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலி கொள்முதல்களை கணக்கில் காட்ட மட்டுமே இந்த போலி கம்பெனியை பயன்படுத்தி வந்ததும் ரெய்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கம்பெனிகளில் ரூ.1,500 கோடி அளவுக்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.