Published:Updated:

சேலம்: `புதையல் எடுக்கணும்னா ஆவிக்கு ஒரு லட்ச ரூபா கொடுக்கணும்' - பெண்ணை ஏமாற்றிய போலி மந்திரவாதி

செல்வராஜ் ( போலி மந்திரவாதி )

ஒரு லட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்த பிறகு மந்திரவாதி புதையலை எடுத்துக் கொடுக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண் போலீஸில் புகார் அளித்திருக்கிறார்.

சேலம்: `புதையல் எடுக்கணும்னா ஆவிக்கு ஒரு லட்ச ரூபா கொடுக்கணும்' - பெண்ணை ஏமாற்றிய போலி மந்திரவாதி

ஒரு லட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்த பிறகு மந்திரவாதி புதையலை எடுத்துக் கொடுக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண் போலீஸில் புகார் அளித்திருக்கிறார்.

Published:Updated:
செல்வராஜ் ( போலி மந்திரவாதி )

சேலம், வாழப்பாடியை அடுத்த கீரப்பட்டி மலை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகேசன். இவரின் மனைவி பழனியம்மாள். கடந்த 2022, டிசம்பர் 29-ம் தேதி இவரின் வீட்டுக்கு வந்த மர்ம நபர் ஒருவர், தான் மந்திரவாதி என்றும், `எனக்கு சித்து வேலைகளெல்லாம் நன்றாகத் தெரியும். உங்கள் வீட்டுக்குள் ஒரு மர்மப் புதையல் ஒன்று மறைந்து இருக்கிறது. அதை நீங்கள் எடுத்தால் மிகப்பெரிய லட்சாதிபதியாக இருப்பீர்கள்’ என்று ஆசைவார்த்தை கூறியிருக்கிறார்.

இதை நம்பிய பழனியம்மாள் உடனே அந்தப் புதையலை எடுத்துத் தருமாறு அந்த மர்ம நபரிடம் கூறியிருக்கிறார். அதற்கு அந்த நபர், `புதையல் எடுக்க வேண்டுமென்றால் ஒரு லட்ச ரூபாய் செலவாகும். சில ஆவிகளையெல்லாம் கூப்பிட்டுத்தான் இதை எடுக்கணும். ஆவிங்க சும்மா வராது. அதற்குக் கொஞ்சம் காசு செலவு பண்ணினால்தான், அதுங்களும் வந்து எடுத்துக் கொடுக்கும்’ என்றிருக்கிறார்.

கைது
கைது
சித்திரிப்புப் படம்

அதற்கு பழனியம்மாள் பணம் கொடுக்கச் சம்மதித்து, ஒரு லட்ச ரூபாய் பணத்தைத் திரட்டி அந்த போலிச் சாமியாரிடம் கொடுத்திருக்கிறார். பணத்தை கையில் வாங்கியவர், `பொழுது சாய்ந்துவிட்டது. இப்போது ஆவிகளைக் கூப்பிட்டால் வந்து புதையல் எடுத்துக்கொடுக்காது. காலையில் எடுத்துக்கொள்ளலாம்’ என்று கூறியிருக்கிறார். அதன் பின்னர் அந்த நபர் தலைமறைவாகியிருக்கிறார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பழனியம்மாள், வாழப்பாடி போலீஸாரிடம் புகார் அளித்திருக்கிறார்.

அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தியதில், புதையல் எடுத்துக்கொடுப்பதாகக் கூறி ஏமாற்றியது நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு இறையமங்கலம் பகுதியைச் சேர்ந்த போலி மந்திரவாதி செல்வராஜ் என்பது தெரியவந்தது. அதன்பேரில் சம்பந்தப்பட்ட நபரை போலீஸார் கைதுசெய்து, சிறையில் அடைத்தனர்.