Published:Updated:

சேலம்: `மீண்டும் அழைத்தேன்; வர மறுத்தார்!' - கொலையில் முடிந்த திருமணம் தாண்டிய உறவு

கொலை
கொலை

போலீஸ் விசாரணையில், பெரியக்காவுக்கு சுரேஷுடன் பழக்கம் இருந்ததும், அவர்தான் பெரியக்காவைக் கொலை செய்திருக்கிறார் என்பதும் தெரியவந்திருக்கிறது.

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகேயுள்ள பல்லக்கானூர், கோனேரிபெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் கண்ணன், பெரியக்கா தம்பதியர். தம்பதியர் இருவரும் ஜலகண்டாபுரம் அருகிலுள்ள தேங்காய் நார் மில்லுக்கு வேலைக்குச் சென்றுவந்திருக்கிறார்கள். தேங்காய் நார் மில்லில் டிரைவராக வேலை பார்த்துவந்த சுரேஷ் என்பவருக்கும், பெரியக்காவுக்கும் நட்பு ஏற்பட்டு, நாளடைவில் அது திருமணம் மீறிய உறவாக மாறியிருக்கிறது. கடந்த ஆறு மாதங்களாக இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்துக்கொண்டு நெருக்கமாக இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் கணவர் கண்ணனுக்குத் தெரியவர, அவர் பெரியக்காவைக் கடுமையாகக் கண்டித்து, செல்போனைப் பிடுங்கிவைத்திருக்கிறார்.

கொலை
கொலை

கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி இரவு வீட்டிலிருந்த பெரியக்கா திடீரென காணாமல் போயிருக்கிறார். கணவர் கண்ணன், அவருடைய உறவினர்கள் அவரைத் தேடி ஊருக்குள் அலைய, வீட்டுக்குப் பின்பகுதியில் 100 மீட்டர் தூரத்தில் பெரியக்கா நிர்வாணமான நிலையில் சடலமாகக் கிடந்திருக்கிறார். மேலும், அவருடைய முகம் கல்லால் தாக்கிச் சிதைக்கப்பட்டுக் கிடந்திருக்கிறது. இது குறித்துத் தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்கு வந்த ஜலகண்டாபுரம் போலீஸார், பெரியக்காவின் சடலத்தைக் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணையில் இறங்கினர்.

கொடூரக் கொலை; 30 நிமிடத்தில் குற்றவாளிகளை அடையாளம் காட்டிய டாபர்மேன் நாய்!

விசாரணையில், பெரியக்காவுக்கு சுரேஷுடன் பழக்கம் இருந்ததும், அவர்தான் பெரியக்காவைக் கொலை செய்திருக்கிறார் என்பதும் தெரியவந்திருக்கிறது. அதையடுத்து சுரேஷைக் கைதுசெய்து போலீஸார் விசாரிக்க, `நானும் பெரியக்காவும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்துவந்தோம். சம்பவத்தன்று பெரியக்காவை வரவழைத்து சந்தோஷமாக இருந்தோம். இரண்டாவது முறை உறவுக்கு அழைத்தபோது எங்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

17 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என விடுவிக்கப்பட்ட தாய்!-பெற்ற குழந்தை கொலை வழக்கில் நடந்தது என்ன?

`என் கூட சந்தோஷமா இருந்துட்டு விட்டுட்டுப் போயிடுவ. நீ எனக்கு வேணும். நீ என்கூடதான் இருக்கணும்' என பெரியக்கா சண்டை போட்டார். கோபத்தில் அவரது கழுத்தை நெரித்து கீழே தள்ளினேன். அப்போது கீழேயிருந்த கல் தலையில் குத்தி ரத்தம் பீறிட்டது. கோபம் அடங்காமல் கல்லை எடுத்து அவருடைய தலையில் போட்டுக் கொலை செய்தேன்' என வாக்குமூலம் கொடுத்து போலீஸாரையே அதிரவைத்திருக்கிறார். அதையடுத்து சுரேஷ்மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு