Published:Updated:

`சட்டவிரோதமாக மணல் அள்ளி மோசடி!’ - பஞ்சாப் முதல்வர் சன்னியின் உறவினரைக் கைதுசெய்த அமலாக்கப் பிரிவு

முதல்வர் சன்னியுடன் புபிந்தர் சிங்

பஞ்சாப்பில் சட்டவிரோத மணல் மோசடி தொடர்பாக பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினரை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

`சட்டவிரோதமாக மணல் அள்ளி மோசடி!’ - பஞ்சாப் முதல்வர் சன்னியின் உறவினரைக் கைதுசெய்த அமலாக்கப் பிரிவு

பஞ்சாப்பில் சட்டவிரோத மணல் மோசடி தொடர்பாக பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினரை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

Published:Updated:
முதல்வர் சன்னியுடன் புபிந்தர் சிங்

பஞ்சாபில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. தேர்தல் நேரத்தில், கடந்த மாதம் பஞ்சாப் முதல்வர் சரண்ஜி சிங் சன்னியின் உறவினர் புபிந்தர் சிங் ஹனியின் வீடு மற்றும் அலுவலங்களில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது. லூதியானா, மொகாலி உட்பட முக்கிய பஞ்சாப் நகரங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் ரூ.10 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோதமாக மணல் அள்ளியது தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 21 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், 12 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன. 10 கோடி ரூபாய் புபிந்தரின் இரண்டு வீடுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் புபிந்தர் சிங் வியாழக்கிழமை விசாரணைக்காக அழைக்கப்பட்டார்.

முதல்வர் சென்னியுடன் புபிந்தர் சிங்
முதல்வர் சென்னியுடன் புபிந்தர் சிங்

எட்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், பின்னர் அவரைக் கைதுசெய்தனர். இன்று நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரிக்கவிருக்கின்றனர். புபிந்தர் சிங் கம்பெனி மணல் அள்ளும் தொழிலில் ஈடுபட்டுள்ளது. இந்த கம்பெனியில் குத்ரதீப் சிங், சந்தீப் குமார் ஆகியோரும் இயக்குநர்களாக இருக்கின்றனர். மூன்று பேரும் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது மற்றும் பண மோசடியில் ஈடுபடுவதாக விசாரணையில் தெரியவந்திருப்பதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவர்களின் கம்பெனி 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடங்கிய ஆறு மாதங்களில் குத்ரதீப் சிங் மீது சட்டவிரோதமாக மணல் அள்ளியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மணல் அள்ளும் குவாரிகளில் சுரங்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். இதில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து வேறு இடங்களில் மணல் எடுத்ததும், எடை மெஷினில் திருத்தம் செய்திருந்ததும், அளவுக்கு அதிகமாக லாரிகளில் மணல் ஏற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீஸார் 2018-ம் ஆண்டு பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கப் பிரிவு விசாரணையைத் தொடங்கியது. கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தி மணல் எடுப்பதற்கான ஒப்பந்தத்தை இவர்களின் கம்பெனி பெற்றிருக்கலாம் என்று அமலாக்கப் பிரிவு கருதுகிறது. இதற்கிடையே, பாஜக-வின் தூண்டுதலின்பேரில் அமலாக்கப் பிரிவு இந்த விசாரணையை நடத்திவருவதாக முதல்வர் சன்னி குற்றம்சாட்டியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism